சந்தனம்


Online Shopping Cart and Payment Gateway : agridial shops - Shopping Cart Support by agridial.

Developed: AgriInfoMedia

சந்தனம்

சந்தனம் செடிகள் வாங்கிட...

 சந்தன மரமானது வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய ஒரு சிறிய மரம் ஆகும்.

• எல்லா மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடியது. பராமரிப்பு செலவு இல்லை.

• கன்று வைத்து 6 மாத காலம் நீர் ஊற்றினால் போதும். வறட்சியை தாங்கி நன்கு வளரக்கூடியது.

• சந்தனமரம் ஒரு மானாவரி பயிர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மழைநீரே போதுமானது.

• சவுக்குஅகத்திதென்னைமாபலாசப்போட்டாகொய்யா தோப்புபெருநெல்லி மற்றும் தோப்பாக உள்ள எல்லா 

வகையான மரங்களின் இடைவெளியில் சந்தன மரம் நன்கு வளரும்.

• வேப்பம் (வேம்பு) மரமும்சந்தன மரமும் ஒரே குடும்ப வகையை சேர்ந்த மரங்களாகும்.அதனால் வேப்ப மரம் 

எங்கெல்லாம் உள்ளதோ அங்கு சந்தன மரம் நன்கு வளரும்.

• வீடுபள்ளிகல்லூரி வளாகம் மற்றும் தொழிற்காலைகளில் உள்ள காலி இடங்களில் சந்தன மரங்களை வளர்க்கலாம்.

• குறைந்த பட்சம் 9X9 அடி இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 550 மரங்கள் வளர்க்கலாம்.

• சந்தன கன்று நட்ட பிறகு இடைவெளியில் எல்லா வகையான ஊடு பயிர்களையும் பயிர் செய்து கொள்ளலாம்.

• சந்தன மரத்துடன் சேர்த்து அகர்தேக்குகுமிழ்மலைவேம்பு கன்றுகள் வளர்க்கலாம்.

• கன்று நட்டு 12 முதல் 14 வருடங்களில் 15 கிலோவிலிருந்து 20 கிலோ வரை வைரம் (சேவு)விளைந்துவிடும்.

•  இன்றைய அரசு விலைப்படி 1 கிலோ வைரம் ரூ.7200-  முதல் 8000 வரை  விற்கப்படுகிறது.  12 முதல்  14 வருடங்கள் கழித்து இதன் மதிப்பு பல மடங்காக உயர்ந்து விடும்.  

• 1 ஏக்கருக்கு 3கோடி  முதல் 5 கோடி வரை  வருவாய்.

20 கிலோ வைரம் (சேவு) கிடைக்கும். மரத்தில் மீதமுள்ள மற்ற பாகங்கள்  அனைத்தும்விலை மதிப்புள்ளது.

• வைரம் போக மீதமுள்ள வெள்ளை கழிவு குறைந்த பட்சம் 80 கிலோ முதல் 100 கிலோவரை

கிடைக்கும்.

• வெள்ளை ஒரு கிலோவின் விலை தற்போது அரசாங்கத்தினால் ரூ.1500-க்கு ஏலம்விடப்பட்டுள்ளது. 12-14 வருடம் கழித்து இதன் மதிப்பும் பல மடங்காக உயர்ந்துவிடும்.

• சந்தனக் கட்டையானது சந்தன மரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட நறுமணம் மிகுந்தபொருளாகும்.

இந்த சந்தன கட்டை மஞ்சள் மற்றும் லோசான பழுப்பு நிறமாகவும்மிகவும்உறுதியாகவும் மற்ற 

வாசனை கட்டைகள் போல் அல்லாமல் இதன் நறுமணத்தைபலஆயிரம் ஆண்டுகளுக்கும் கொஞ்சம் 

கூட தன்வாசனை குறையாமல் வாசனையைதன்னுடனே வைத்து கொள்ளும் தன்மையை கொண்டது.

• சந்தன மரம் சித்திர வேலைப்பாடுகள்இசை பெட்டிகள்செஸ் போர்டுகள்மரப்பெட்டிகள்,

மரக்கதவுகள்பேனா தாங்கிகள்பேப்பர் வெயிட்கத்தி கைப்பிடிகள்புகைப்பட ஃபிரேம்கள்,

பாசிகள்செறுப்புகள்அகர்பத்திகள்அழகுசாதன பொருட்கள்சோப்புகள்முக பவுடர்கள்,

நறுமணப் பொருட்கள்மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க பகுதி பொருட்களாக

பயன்படுகிறது.

• சந்தனமரம் பட்டா நிலங்களில் நடவு செய்ய அரசு அனுமதி தேவையில்லை. சந்தனமரத்தை விற்க 

அரசு அனுமதி பெற வேண்டும்.

• பட்டா நிலத்தில் சந்தன மரம் வளர்த்து 10% விற்பனை வரி போக மீதம் முழுவதும் விவசாயிக்கே 

சொந்தம் என்று 03.09.2002 மற்றும் 2009-ல்  அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

• சந்தன மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு விவசாய சங்கத்தின் மூலமாக உத்திரவாத சான்றிதழ் வழங்கப்படுகிறது.

• கன்று நட்ட பிறகு மத்திய அரசு 75% மானியம் வழங்குகிறது.

சந்தனம் செடிகள் வாங்கிட...

 

 

ஊட்டம் அளிப்பது வேளாண்மைத் தகவல் ஊடகம்
RichFarmer Trees Plantation Private Limited © 2019