அகர்


Online Shopping Cart and Payment Gateway : agridial shops - Shopping Cart Support by agridial.

Developed: AgriInfoMedia

அகர்

அகர் செடிகள் வாங்கிட...

 • அகர் மரம், மரங்களின் கடவுள் என்றும் வாசனை திரவியங்களின் அரசன் என்றும், பசுமை தங்கம் என்றும் 3000-ம் ஆண்டுகளாக உலக மக்களால் போற்றப்படுகிறது. அகில் சந்தனம் என்றும் அழைக்கப்படுகிறது.

 • அகர் மரம் சந்தன மரத்தைவிட பல மடங்கு விலை மதிப்பு வாய்ந்தது. இதற்கு காரணம் அகர் வாசனையை செயற்கை முறையில் தயாரிக்க முடியாது.
 • இம்மரம் வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் காணப்படுகிறது.
 • அகர் மரத்தில் 16 வகைள் உள்ளன. இவற்றில் 5 ரகங்கள் தமிழகத்தில் நன்கு வளரும்.
 • சந்தனம் தேக்கு, குமிழ், மலைவேம்பு, மரம் வளரும் இடத்தில் அகர் மரம் வளரும்.
 • நடவு செய்து ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு பராமரிப்பு தேவையில்லை.

 • தென்னை, பாக்கு, காப்பி, தேயிலை மற்றும் தோப்பாக உள்ள அனைத்து நிலங்களிலும் உடுபயிராக சாகுபடி செய்யலாம்.
 • அகர் மரத்திற்கு பாதுகாப்பு தேவையில்லை.
 • நமது நிறுவனமே விவசாயிகளிடம் கொள்முதல் ஒப்பந்த அடிப்படையில் தரமான கன்றுகளை வழங்குகிறது.
 • குறைந்த முதலீடு, குறைந்த உழைப்பு, மிக அதிக லாபம் தரும் இவ்வுலகத்தில் ஒரே ஒரு மரம் அகர்மரம்தான்.

 

 

 • மரம் நட்ட 6-வது ஆண்டுக்கு பிறகு மரத்தில் அகர் உருவாக்க நவீன விஞ்ஞான முறையில் மரத்திற்கு ஊசிப்போட வேண்டும். பிறகு அம்மரத்தை ஊசிப்போட்ட6-ம் மாதம் முதல் 2 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம்.

 

 • அகர் ரெசினும் அகர் ஆயிலும் சர்வதேச சந்தையில் ஒரே விலையில் விற்கப்படுகிறது.
 • 1 கிலோ அகர் ஆயில் தயாரிக்க 100 முதல் 150 கிலோ அகர்மரம் தேவைப்படுகிறது. 1 கிலோ முதல்தர அகர் ஆயிர் மற்றும் அகர் ரெசீன் ஜப்பானில் ரூ.30 லட்சம் வரையும், சர்வதேச சந்தையில் இரண்டாம் தரம் ரூ.10லட்சம் வரையிலும், மூன்றாம் தரம் ரூ.4 லட்சம் வரையிலும் விற்கப்படுகிறது.
 • உலக தேவையில் 10% மட்டுமே அகர் மரம் உற்பத்தி செய்யப்படுவதே இதன் மதிப்பிற்கு காரணம்.

 
 
 • அகர் மரத்தின் இலை, வேர், கிளை, கட்டை என எல்லா பகுதிகளையும் விற்பனை செய்யலாம்.
 • அகர் மரம் மருந்தாகவும், வாசனை திரவியாகவும், சோப்பு, மெழுகுவர்த்தி,ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் இதர அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கவும் மேலும் எல்லா இயற்க்கை மருத்துவத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது.
 • அகர்மரம் சாகுபடி செய்ய அரசு கட்டுப்பாடு ஏதும் இல்லை. விற்பனை வரி ஏதும் இல்லை.   
 • அகர் மரம் நடவு செய்ய 75% அரசு மானியம் வழங்குகிறது.

 

அகுலேரியா

தென்கிழக்கு ஆசிய நாடுகளை பூர்வீகமாக கொண்டது.இந்த மரம் இந்தோனேசியா, தாய்லாந்து,  கம்போடியா,  லாவோஸ்வியட்நாம், மலேசியாபிலிப்பைன்ஸ் ,போர்னியோய்நியூகுனியா மற்றும் வடகிழக்குஇந்திய மாநிலங்களின் காடுகளில் பரவலாக காணப் படுகிறது. இந்த இனம் 6 மீட்டர் முதல் 20 மீட்டர் வரை வளரும். இதன் இலை 5 முதல் 11 செ.மீ நீளமும், 2 முதல் 4 செ.மீ அகலமும் உடையது. இதன் பூக்கள் பசும் மஞ்சள் நிறத்திலும்காய் 3 செ.மீ நீளத்திலும் இருக்கும்.

 

அகர்வுட்

 

அகர்வுட் என்பது அகுலேரியா இனத்தை சேர்ந்த மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கருப்பு நிறமான வாசனை மிக்க கோந்து ஆகும் (ரெசீன்)இம்மரத்தின் 

வைரம் பாய்ந்த பகுதி லேசான பழுப்பு கலரில் இருக்கும்இப்பகுதி பூஞ்சையினால் தாக்கப்படும் போதுஇம்மரமானது கருப்பு நிறமான வாசனை மிக்க கோந்தை உருவாக்குகிறது. இம்மரத்தில் இருந்து பலவகையான வாசனைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

 

வாசனைப்பொருட்கள்

அகர்மரத்தின் வாசனை பொருட்களை எரிக்கும்போது உருவாகும் புகையில் இருந்து மிகவும் அற்புதமான வாசனை கிடைக்கிறது. இது அனைத்து சமயத்தினரும் பயன்படுத்தக் கூடிய வாசனைப் பொருளாகவும் மற்றும் யோகா,தியானம்போன்ற பயிற்சிகளில் மனதை ஒருமுகப்படுத்த பயன்படுகிறது. மேலும் உலகத்தில் உள்ள எல்லா இயற்கை மருத்துவத்திலும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது.

 

ரெசீன் (கோந்து)

அகர்ரெசீன் என்பது அகர்மரத்தில் இருந்து சுரக்கப்டும் ஹைட்ரோ கார்பன் ஆகும். இதில் இருந்து வெளிப்படும் நறுமணம் வாசனைப் பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுகிறது.

 

அகர் ஆயில்

அகர் ஆயில் என்பது அகர் கட்டைகளை நீராவியில் கொதிக்க வைக்கும்போது உருவாகும் ஆவியை குளிரவைத்து உருவாக்கப்பட்ட திரவம் ஆகும். இந்த ஆயில் காலம் காலமாக உலக இயற்கை மருத்துவத்திலும் வாசனைப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

நீராவி வடித்து எடுத்தல்

நீராவி வடித்தெடுத்தல் முறையானதுவாசனை தரும் தாவரங்களில் இருந்து வாசனையை பிரித்தெடுக்க பயன்படுத்தப்படும் முறையாகும்.

அகர்வாசனை திரவியங்கள்

அகர்வாசனை திரவியம் ஆனது அகர் ஆயிலையும்அகர் ரெசீனையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு உன்னதமான வாசனை பொருளாகும். இது மனிதனுக்கும்,விலங்குகளுக்கும்மற்ற பொருட்களுக்கும்வசிக்கும் இடங்களுக்கும் ஒரு இதமான நறுமணத்தை உருவாக்க பயன்படுகிறது.

 

அகர்வாசனை திரவியங்களின் வரலாறு

அகர்வாசனை திரவியமானது பண்டை காலத்தில் எகிப்து நாட்டில் இருந்து ஆரம்பித்து பிறகு ரோமன் மற்றும் அரபு நாடுகளில் மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகத்தின் முதல் வேதியல் நிபுணரான சப்புதியே முதன் முதலில் அகர்மரத்தில் இருந்து வாசனை பொருட்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் ஆவார்.

 

முன்னுரை

அகர் மரம்ஈகுல் மரம்காஹாருஷாஷிஅலோஸ் மரம்ஒட் கலம்பாக் மற்றும் ஜீன் ஹாக் இவை அனைத்தும் அகுலேரியா மரங்களின் மறுபெயர்கள். இவை மரங்களின் கடவுள்வாசனையின் அரசன்மற்றும் பச்சை தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. அகுலேரியா இன மரங்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வேகமாக வளரும் தன்மை கொண்டவையாகவும்வெப்ப மண்டல காடுகளிலும்தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள்இமயமலை அடிவார மலை காடுகளிலும் காணப்படுகிறது.

 

அகர் மரங்கள் விரைவாக வளர்ந்து பூவிதைகளை 4 ஆண்டுகளிலேயே தரக்கூடியவை. அகரில் 16 க்கும் மேற்பட்ட இரகங்கள் உள்ளன. இவற்றில் பொதுவாக காணப்படும் இந்திய ரகம் அக்குலேரியா அகலோச்சா ஆகும்.

அகர் மரங்கள் பூஞ்சையினால் தாக்கப்பட்டு ரெசினை உற்பத்தி செய்து அகரை சுரக்கிறது. இந்த பூஞ்ஞையினம் வளர வளர அகர் ரெசின் உற்பத்தியின் தரமும் அதிகரிக்கின்றது. இந்த ரெசின் மணம்மிகவும் தனித்தன்மை கொண்டது. இத்தகைய மணம் மற்ற வாசனை திரவியங்களின் மணதை ஒத்தது அல்ல.

 

அகர் மரம்

அகர் மரம் 100% சுத்தமான வாசனையுடையது. இது அடர்த்தி மிகு எண்ணெய்,வெல்வெட் போன்று மென்மையானது. அதன் ஒரு துளியை முகர்ந்தாலும் உடம்பில் தெளித்துக்கொண்டாலும்நமது மனம்உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் புத்துணர்ச்சி பெறும். அகர் திரவியத்தை ஒருமுறை பயன்படுத்தினாலும் அதன் வாசனையை யாராலும் மறக்க முடியாது. அகர் எண்ணெயினை பொருத்தவரை உடலுக்கும்மனத்திற்கும் சுறு சுறுப்பையும் புத்துணர்ச்சியையும் தருகிறது.

 

அகர் எண்ணெய் பிரித்தெடுக்கும் முறை

அகர் மரத்திலிருந்து அகர் ரெசினை பிரித்தெடுப்பதற்கு படிய வைப்பான் எனப்படும் Distilators-யை பயன்படுத்துகிறார்கள். அகர் 

பொதுவாக நீர் மற்றும் வெப்ப படிய வைத்தல் மூலம் பிரித்தெடுக்கப் படுகிறது. ஆவியாக்கி பிரித்தெடுத்தலில்அகர் சீவல்கள் வெப்ப படிய வைப்பான்களில் போடப்படுகிறது. அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படும் பொழுது அகர் சீவல்களில் இருந்து ரெசின் எண்ணெய் துளை வழியாக புனலை வந்து அடைகிறது. இந்த முறை பொதுவாக கிழக்கு ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த திரவம் சேகரிக்கப்பட்டுகலன்களில் (குப்பிகளில்) அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த முறையில் இறந்த மரப்பகுதியில் உள்ள எண்ணெய் திரவம் பிரித்தெடுக்கப்படுவதில்லை. அதிகமாக பூஞ்சை தொற்று உயிர் பகுதிகளை கொண்ட மரச்சீவல்களும் படிய வைத்தல் மூலம் பிரித்தெடுக்க தேவையில்லை. ஏனெனில்அது அப்படியே அதிக விலைக்கு விற்பனையாகிவிடும். இவ்வாறு படிய வைத்தல் மூலம் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் குறைந்த ஆயுள் காலத்தை கொண்டு இருப்பதால் புதுப்புது மரப்பட்டைகளை பயன்படுத்தி பிரித்தெடுக்கலாம். 1லிட்டர் எண்ணெய் பிரித்தெடுக்க சுமாராக 100 லிருந்து 150 கிலோ அகர் மரக்கட்டை தேவைப்படுகிறது.

 

அகர் மரத்தின் பயன்கள்

அகர் மரம் 3 முக்கிய வழிகளில் பயன்படுகிறது. அவை 1).மருத்துவ முறை 2).வாசனை திரவியமாக 3).ஊக்க மூட்டியாக.                 இவை பொதுவாக அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படும் அலங்கார பொருளாகவும்சோப்புமெழுகுகள்,வாசைன திரவியம்ஷாம்புஉடல் பூச்சு போன்ற பல்வேறு வகைகளில் பயன்படுகிறது.

பழங்கால சீன மருத்துவம் மட்டுமல்லாது வியட்னாம் நாட்டிலும் வாசனை மருத்துவமாகவும் (Aromatherapy) ஆயுர் வேதம் போன்ற மருத்துவ துறையிலும் அகர்மரம் பயன்பட்டு வருகிறது.

அகர்மரம் வீட்டு வாசைன திரவியமாகவும் மற்றும் வீட்டு சுத்திகரிப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது.

அகர் மரத்தின் இனிய மணம் இந்துமுஸ்லீம்;, கிறிஸ்த்துவ மற்றும் புத்த சமய வழிபாடுகளுக்கும்தியானங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

அலங்கார சிலைகள்மணிகள்தேனீர்வைன் (மதுபானம்) வழிபாட்டு திவரம் போன்றவைகளில் அகர்மரம் பல்வேறு ரூபங்களாக பயன்படுத்தப்படுகிறது.

எகிப்தியர்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவேஅகர் மரம் இறந்த பின் மறு பிறப்பிற்கு உதவுவதாக நம்புகின்றனர்.

 

அகர் மரத்தின் மதிப்பு

அகர் மரம் பல்வேறு வகைகளில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மரசீவல்பௌடர்,எண்ணெய்வாசனை திரவியம்மருந்துப்பொருளாகவும் மற்றும் அகர்பத்தியாகவும் பயன்படுகிறது.

அரபு நாடுகள்சௌதி அரேபியாஹாங்காங்தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அகர் மரத்தினை இறக்குமதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

தரமான அகர் மரம் பச்சை எமரால்ட்களை விட அதிக மதிப்பு கொண்டது. கருப்பாகவும்முழுவதும் ரெசின் கொண்ட மரங்கள் பல ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டது.

அகர் மரத்தின் சிறு சீவல்கள் கூட வாசனை ஊக்கமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை நிற அகர் மர ரெசினை படியமாக்கல் மூலம் பிரித்தெடுக்கப்பட்டுவாசனைதிரவியமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வாசனை திரவியங்கள் மதிப்பு 10 கிராமின் விலை 1000 டாலர் ஆகும்.

ஏப்ரல் 2013 நிலவரப்படி...

A கிரேடு அகரின் விலை 52000 அமெரிக்க டாலர்/கிலோ 

B கிரேடு அகரின் விலை 22000 அமெரிக்க டாலர்/கிலோ

C கிரேடு அகரின் விலை 9000 அமெரிக்க டாலர்/கிலோ

 

 

அகர் மரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது உலகில் அகர் தேவையில் 10 சதவிகிதம் மட்டுமே பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. தற்போது அகர் மரத்தின் எண்ணெய் 50000 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

அகர் மரத்தின் விளைச்சலை அதிகரிக்கும் வழிகள்

        அகர் மரம் சாதாரணமாக காடுகளிலேயே வளரும். அவை சுமாராக கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் இருக்கும் இடத்தில் வரை வளரும். 400-600 மீட்டர் கடல் மட்டம் உயரம் மிகவும் உகந்தது. இம்மரம் குறைந்த மண்வளம் உள்ள மண்ணிலும் தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களிலும்கூட வளரும். இது வளர உகந்த வெப்பநிலை 27’C மற்றும் 70% சூரிய வெளிச்சம் தேவை. இம்மரங்கள் 49ஆண்டுகளில் 15-30 மீட்டர் உயரமும் 60 செ.மீ விட்டமும் வளரக்கூடியது.

  

        விரைவாகசிறிய செடிகளில் இருந்து வயல்களில் வளரும் தன்மைக்கொண்டது. நன்கு முளைக்கும் தன்மையுள்ள விதை மிகவும் முக்கியமானது. செடிகள் நாற்றங்காளில் வளர்க்கப்பட்டு நன்கு ஊட்டப்படுத்தப்படுகிறது. அகர் மரத்தின் விதைகள் 3.5 செ.மீ உயரமும்பழுப்பு நிறமுள்ள விதை கொட்டைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அவை ஒவ்வொரு விதை உறையிலும் இரண்டு விதைகள் காணப்படும்.

 

       

மற்ற மரங்களுடன் ஊடுபயிர் செய்ய உகந்தது. அகர் மரங்கள் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் வேகமாகவும்பசுமையாகவும் வளர கூடியது. இவை காபிடிதென்னைசந்தனம்குமிழ் தேக்குமலைவேம்புமாபலாகொய்யா,சப்போட்டா போன்ற மரங்களுடன் ஊடுபயிர் செய்ய ஏற்றது. 5-8 வருடம் ஆன மரங்களுடன் ஊடுபயிராகவும் வரப்பு பயிராகவும் வளர்க்க ஏற்றது.

 

பயிரிடும் முறை மற்றும் இடைவெளி

        6x6 அடி அல்லது 10x10 அடி இடைவெளியில் 1¼X1¼X1¼ குழி எடுத்து அதில் அகர் கன்றுகளை குழியின் மேல் மண்ணுடன் சேர்த்து நட்டு செடி ஆடாமல் நடவு செய்ய வேண்டும்பின் தண்ணீர் ஊற்ற வேண்டும். கன்று நடவிற்கு முன் தென்னை நார் அல்லது எரித்த தவிடு ஆகிய ஏதாவது ஒன்றை இடலாம். அல்லது இயற்கை உரத்தினை 40-45 கிராம் குழி ஒன்றுக்கு கொடுக்கலாம். அல்லது NPK15:15:15 விகித உரத்தை குழிக்கு 100 கிராம் கொடுக்கலாம்.

 

 • பக்க கிளை வளர்ச்சியை தடுத்தல்
 • அகர் மரங்கள் மேல்நோக்கி நேராக வளர மூங்கில் கழிகள் அல்லது குச்சிகளை அகர் கன்றுகளுடன் சேர்த்து கட்டலாம்.
 • நடவு செய்த அகர் கன்றுகளை பராமரித்தல்
 • 2 மீட்டர் இடைவெளிகளுடன் அகர் மரத்தை மற்ற மரங்களுடன் பயிரிடுவதன் மூலம் பயிர் போட்டிகளை தடுக்கலாம். 2-5 வருடத்திற்கு நிலங்களை இடை உழவு செய்து கன்றுக்கு ஆக்ஸிஜனை பரிமாணத்திற்கு வழி வகுக்க வேண்டும்.

      அகர் சாகுபடியில் எல்லா வித தொழில்களிலும் இடையுறுகள் என்பது இயல்பான ஒன்று. அதே போல் அகரிலும் இடர்பாடுகள் உள்ளன. அவை,

 

காட்டுத்தீ

       அகர் மரக்காடுகளில் காட்டுத்தீ பரவாமல் இருக்க முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதே போல் அலுவலர்கள் எப்பொழுதும் விழிப்புடன் அகர் காடுகளை கண்காணிக்க வேண்டும்.

      அகரில் தொடக்கத்தில் மட்டும் சிறு சிறு பூச்சிநோய் தாக்குதல் இருக்கும்,அவற்றை உடனுக்குடன் கண்காணித்து நோய் கட்டுப்பாட்டு மேலாண்மையினை செய்ய வேண்டும். அதே சமயம் நன்மை தரும் பூச்சிகளை அழிக்காமல் அகர் ரெசின் உற்பத்திக்கு பயன்படும் பூஞ்ஞைகள் உருவாக்கத்தை கட்டுப்படுத்தாமலும் இருக்க வேண்டும்.

 

வறட்சி

      

 

 அகர் மர உற்பத்திக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிலங்கள் அதிக வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற பாதிப்புகள் இல்லாத தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அதே சமயம் தண்ணீர் பற்றாக்குறையினை போக்கும் வகையில் கிணறு பாசணம் அல்லது போர்வெல் போன்ற வசதிகளை வளர்த்துக் கொள்ளலாம்.

 

விலை

      எந்த ஒரு தொழிலிலும் பொருட்களை விற்றுபோட்ட முதலீட்டை திரும்ப பெருவதே முக்கிய நோக்கமாகும். எந்த ஒரு தொழிலிலும் லாபம் கிடைப்பதை உத்திரவாதத்துடன் கூற முடியாது. அகர் மரம் உற்பத்தியிலும் ரெசின் அறுவடைக்கு வந்து சந்தையில் விலை போகும் வரை அதன் லாபத்தை கூற முடியாது. ஆனால்கடந்த 50 வருடங்களாக அகர் மரத்தின் சந்தை மதிப்பு அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

 

முடிவுரை

      

 

மரம் வளர்க்க விரும்பும் அனைவருக்கும் அகர் மரம் வளர்ப்புஒரு நல்ல திட்டமாகும். அகர் மர வளர்ப்பிற்கு தேவையான அனைத்து வழிகளையும் நாங்கள் காட்டுகிறோம். அகர் மர வளர்ப்பானது சாதாரண விவசாய விஞ்ஞானிகளின் கீழ் பயிரிடப்படுகிறது. அவை வனத்துறையின் கீழ் வருவது இல்லை. நல்ல அகர் மரக்கன்றுகளை தேர்வு செய்து நடுவதன் மூலமே தரமான மற்றும் அதிகப்படியான ரெசின் உற்பத்திக்கு வழிவகுக்கும். அத்தகைய வழிகளையே நாங்களும் அகர் விவசாயிகளுக்கு தருகிறோம்.

 

அகர் செடிகள் வாங்கிட...

  

 

ஊட்டம் அளிப்பது வேளாண்மைத் தகவல் ஊடகம்
RichFarmer Trees Plantation Private Limited © 2019