குமிழ்


Online Shopping Cart and Payment Gateway : agridial shops - Shopping Cart Support by agridial.

Developed: AgriInfoMedia

குமிழ்

குமிழ் செடிகள் வாங்கிட...

இம்மரம் வெர்பனேசி என்ற தேக்கு மரக் குடும்பத்தைச் சார்ந்தது.

மெலினா ஆர்போரியா என்பது இதன் தாவரவியல் பெயராகும்.

வேகாமாக வளரும் மர வகைகளில் இதுவும் ஒன்று.

எல்லா வகை மண்ணுக்கும் ஏற்ற மரம், குறைந்த அளவு தண்ணீரே போதுமானது.

குமிழ் மரமானது கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் வரை இந்தியாவின் எல்லா இடங்களிலும் இயற்கையாக வளரக்கூடிய ஒரு இலையுதிர் மரம் ஆகும்.

இந்த மரம் அதிகபட்சம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். இம் மரத்தின் விட்டம் 1,2 அடிமுதல் 4 அடி வரை இருக்கும்.

மரத்தின் உட்பகுதி லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இது இந்தியாவை தாயகமாக கொண்ட மரமாகும். மேலும் இம்மரமானது மியான்மர்,தாய்லாந்து,

லாவோ, கம்போடியா,வியட்நாம், மற்றும் சீன தெற்குமாகாணங்களில்இயற்கை காடுகளில் 

காணப்படுகிறது.சியாரா,நைஜீரியா,மலேசியா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.

களிமண் நிலத்தில் நன்றாக வளரும.; தொடர்ந்து நீர்தேங்கும் நிலத்தில் வளராது.

வரப்போரங்களிலும் வாய்க்கால் ஓரங்களிலும் நட்டு வளர்க்கலாம். ஏராளமானஇலைகளுடன்

மரம் அழகாக இருக்கும்.

திறந்த வெளிகளில் காற்றுத்தடுப்பானாகவும் இம்மரத்தை வளர்க்கலாம்.

மரங்களிலிருந்து கீழே விழும் இலைகள் மட்கி அந்த நிலத்தை வளப்படுத்தும்.

வறட்சியை தாங்கும் இயல்புடையன.

இம்மரமானது பட்டு புழுக்களுக்கு உணவாகவும்,கால்நடைகளுக்கும், 

மனிதர்களுக்கும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது.

மூன்று ஆண்டுகளில் பூக்கத் தொடங்கும். ஆனால், முழுமையாக 6 ம் ஆண்டில் தான் முழுமையாக பூக்கும்.

குமிழ் மர பூக்களில் அதிக தேன் உள்ளதால் இம்மரத் தோப்புகளில் தேனீக்கள் வளர்த்து வேளாண் பெருங்குடி மக்கள் உபரி வருமானம் தொடர்ந்து பெறலாம்.

7-8 ஆண்டுகளில் மரம் முதிர்ந்து பலன் தரக்கூடியது.

குமிழ் மரம் விளைந்து அறுவடை செய்ததும் அதில் வரும் போத்து மரமானது குறுகிய காலத்திலேயே

5-6 ஆண்டுகளில் விளையும் தன்மை கொண்டது. 

போத்து வளர்க்கும் முறையில் தொடர்ந்து 5 முறை வளர்க்கலாம்.

சாதாரண ஏழை எளிய மக்களும் கூட 10 குமிழ் தேக்கு மரங்களை நட்டு தங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம்.

ஏக்கருக்கு 6x6  இடைவெளியில் 1200 மரங்கள் வரை வளர்க்கலாம். 3-4 ஆண்டுகளில் முதல் வருமானம்,

7-8 ஆண்டுகளில் 2- வருமானம் ஈட்டலாம்.

1 ஏக்கரில் அதிகப்படியான மரம் வளர்ப்பு திட்டத்தில் 1200 குமிழ் மரங்களும் 600 சந்தன மரமும்

600 அகர் மரமும் கலப்பு மரத் தோப்பாக வளர்க்கலாம்.

குமிழ் மரம் 1 டன் விலை ரூ.8500/- ஆகும். 7-8 வருடத்தில் ஒரு மரமானது சிறப்பான பராமரிப்பு செய்தால்

1.5 டன்  எடை குறையாமல் கிடைக்கும்.

குமிழ் மரத்தின் பயனானது தேக்கு மரம் எதற்கெல்லாம் பயன்படுகிறதோ, அதற்கெல்லாம் குமிழ்

மரத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம், குமிழ் மரமும் தேக்குமரத்தின் ஒரு வகைதான்.

ஒரு டன் குமிழ் மரத்தில் 18 கன சதுர அடி பலகை கிடைக்கும். மற்றவகை தேக்குமரங்களில் 

மரங்களில் 12 கன சதுர அடி பலகை மட்டுமே கிடைக்கும்.

பலகைகள் லேசாக இருக்கும் ஆனால் உறுதியானவை. நீடித்து உழைக்கும். 25 முதல்30 ஆண்டுகள் 

விளைந்த தேக்கு மரத்தின் உறுதியை போன்று

7-8 ஆண்டுகள் விளைந்த குமிழ் மரத்தில் உறுதி தன்மை இருக்கும்.

குமிழ் மரம் மர வேலைப்பாடுகளுக்கு ஏற்ற சிறந்த மரமாக விளங்குகிறது.

கைவினைப்பொருட்கள்,மரச்சாமான்கள், பர்னிச்சர்கள், தீப்பெட்டி, பிளைவுட்,

பென்சில், கிரிக்கெட் மட்டை, ஜன்னல், கதவு நிலைகள், சோபா செட்டுகள்,சோகேஸ்கள்

மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கை,கால் தயாரிக்கபயன்படுகிறது.

விறகு தேவைக்கு, குமிழ் மரத்தினை பயன்படுத்தினால்கூட மரம் 1-க்கு ரூ.4000 வீதம் ஒரு ஏக்கருக்கு (850x4000) ரூ.25 லட்சம் உறுதியான வருமானம் கிடைக்கும்.

15 வயது மரத்திலிருந்து  ஒரு மாதத்தில் 10 கிலோ குமிழ் விதைகள் கிடைக்கும்.

ஒரு கிலோ எடையில் சராசரியாக 1000 குமிழ் விதைகள் இருக்கும்.

தற்போது ஒருகிலோ குமிழ் விதை ரூ.750-க்கு விற்கப்படுகிறது.

ஆர்வமுள்ள வேளாண் பெருங்குடிமக்கள் குறைந்த பட்சம் 20 மரங்களை 15 ஆண்டுகள்வளர்த்தால் 

விதைகள் 20x10=200 கிலோ விதைகள்; கிடைக்கும். 200 கிலோ விதையின்மதிப்பு 20x750=1,50,000 லட்சம் ஆகும்.

குமிழ் மரம் வளர்ப்பிற்கு மத்திய அரசு 50% மானியம் வழங்குகிறது.

குமிழ் செடிகள் வாங்கிட...

ஊட்டம் அளிப்பது வேளாண்மைத் தகவல் ஊடகம்
RichFarmer Trees Plantation Private Limited © 2019