அகர்


Online Shopping Cart and Payment Gateway : agridial shops - Shopping Cart Support by agridial.

Developed: AgriInfoMedia

அகர்

கேள்வி - பதில்

 

1) அகர்மரத்தில் எத்தனை வகைகள் உள்ளன?

அகர் மரத்தில் 16 வகைகள் உள்ளன அவை:

1) அகுலேரியா கசினா             9)அகுலேரியா இலாடா

2) அகுலேரியா அகலோசா         10)அகுலேரியா ரோஸ்ட்ராடா

3) அகுலேரியா சப்இண்டகரா       11)அகுலேரியா பிரேன்ச்யன்தா

4) அகுலேரியா கிரஸ்னா           12)அகுலேரியா அபிகுலினா

5) அகுலேரியா பேயில்லோனில்   13)அகுலேரியா பனோன்சிஸ்

6) அகுலேரியா பெக்கரைன்         14)அகுலேரியா பிலாரியா

7) அகுலேரியா குமின்ஷைனா      15)அகுலேரியா கிரான்டிபூலோரா

8) அகுலேரியா மைக்ரோகபா       16)அகுலேரியா சைனன்சிஸ்

 

2) அகர்மரம் எந்த நாட்டை தாயகமாக கொண்டது?

அகர்மரம் 16 வகைகளில் அகுலேரியா கசினா மற்றும் அகுலேரியா அகலோசா ஆகியவை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை தாயகமாகக் கொண்டது. மற்ற14 வகைகள் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியநாடுகளை தாயகமாகக் கொண்டது.

 

3) அகர்மரம் எந்த சீதோஷ்ண நிலையில் வளரும்?

அகர்மரம் கடல் மட்டத்திலிருந்து சிலமீட்டர் உயரத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் வரை எல்லா இடங்களிலும் வளரும்.

 

4) அகர்மரம் எந்தநாட்டில் விவசாயம் அதிகம் செய்யப்படுகிறது?

அகர்மரம்தாய்லாந்துமலேசியாவியட்நாம்மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கடந்த 15 வருடங்களாக அதிகம் விவசாயம் செய்யப்படுகிறது.

 

5) அகர்மரத்தின் ஆயுட் காலம் எத்தனை?

அகர்மரத்தின் ஆயுட்காலம் 40-45 ஆண்டுகள்.

 

6) அகர்மரத்தின் பயன்கள் என்ன?

அகர்மரம் இரண்டு வழிகளில் பயன்படுகிறது.

1) மருந்துபொருள் 2) வாசனை திரவியம்

நாள்தோறும் பயன்படுத்தக் கூடிய சோப்பு களிம்புகள்வாசனை பொருட்கள்,சாம்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் அனைத்து சமயத்தினரும் பயன்படுத்தக் கூடிய வாசனைப் பொருட்கள் மற்றும் யோகாதியானம் போன்ற பயிற்சிகளில் மனதை ஒருமுகப்படுத்தப் பயன்படுகிறது.

சீன மருத்துவம்வியட்நாம் மருத்துவம்திபெத் மருத்துவம்அரோமா தெரபி,ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 

 

7) அகர்மரத்தில் செய்யப்படும் பொருட்கள் என்ன?

மெழுகுவர்த்திஅகர்பத்திசாம்பிராணிடி-பேக்அகர் ஆயில்அகர்மாலைஅகர் இலை பவுடர்அகர் குடிநீர்.

 

8) அகர்மரத்தின் பொருட்களை எந்த நாட்டில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்?

ஒருங்கிணைந்த வளைகுடா அரபு நாடுகளிலும்சவுதி அரேபியாஹாங்காங்,தைவான்மற்றும் ஜப்பானில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

 

9) அகர்மரம் தமிழ்நாட்டில் வளருமா?

அகர்மரம் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மிக நன்றாக வளரும்.

 

10) அகர்மரத்திற்கு வனத்துறை கட்டுப்பாடு இருக்கிறதா?

வனத்துறை கட்டுப்பாடு ஏதும் இல்லை.

 

11) அகர்மரத்திற்கு மத்திய, மாநில அரசு மானியம் அளிக்கப்பட்டுள்ளதா?

அகர்மரத்திற்கு மத்திய அரசு மூலிகை மற்றும் நறுமண மரம் வளர்ப்பு மானியம் 75% சதவீதம் அளிக்கப்படுகிறது.

 

12) அகர்மரம் விற்பனை செய்ய வனத்துறை கட்டுப்பாடு உள்ளதா?

விற்பனை கட்டுப்பாடு ஏதும் இல்லை.

 

13) அகர்மரம் உயர்ந்த மலையில் நன்கு வளருமா?

அகர்மரம் உயர்ந்த மலையில் நன்கு வளரும்.

 

14) அகர்மரத்தின் வாசனையை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?

அகர்மரத்தின் வாசனையை செயற்கை முறையில் உருவாக்க முடியாது. உலக சர்வதேச சந்தையில் நவரத்தினங்களை விட அதிக விலை போவதற்கு இதுவே காரணம்.

 

15) அகர் மரம் சந்தன மரத்தைவிட விலை உயர்வானதா?

அகர்மரம் சந்தன மரத்தைவிட பல மடங்கு விலையுடையது. அகர்மரத்தை பசுமைத்தங்கம் என்றும்மரங்களின் கடவுள் என்றும் வாசனை திரவியங்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.

 

16) விவசாயிகள் அகர்மரம் நடவுசெய்தால் எத்தனை ஆண்டுகளில் பயன் அடையலாம்?

விவசாயிகள் அகர்மரம் நடவுசெய்தால் 7 முதல் 8 ஆண்டுகளில் நவீன விஞ்ஞான முறையை பயன்படுத்தி லாபமடையலாம்.

 

17) அகர்மரத்தில் 16 வகை உள்ளது? நீங்கள் தரும் ரகத்தின் பெயர் என்ன?

நமது நிறுவனம்ஃசங்கம் இந்தியாவில் எல்லா சீதோஷ்ண நிலையில் நன்கு வளரக்கூடிய முதல்தரம்அகர் கொடுக்கக் கூடிய 1)அகுலேரியா சப்இண்டகரா 2)அகுலேரியா கிரஸ்னா 3) அகுலேரியா அகலோசா, 4) அகுலேரியா கசினா ஆகிய ரகங்களை பரிந்துரை செய்கிறது.

 

18) தமிழ்நாட்டில் அகர்மரம் வெப்பத்தையும், குளிர்ச்சியையும் தாங்கி வரும் ரகம் எது?

தாய்லாந்தில் விவசாய நிலங்களில் வளரும் அகிலோரியா சப்இண்டகரா,அகுலேரியா கிரஸ்னாஅகுலேரியா கசினா ஆகியவை தமிழ்நாட்டில் வெப்பத்தையும் குளிர்ச்சியையும் தாங்கி வளரும் ரகங்கள் ஆகும்.

 

19) நிறுவனத்தின் சங்கத்தின் மூலம் ஒப்பந்த சாகுபடி முறையில் அகர்மரம் விவசாயிகளுக்கு தருவீர்களா?

நமது நிறுவனத்தின் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒப்பந்த சாகுபடி முறையில் அகர்மரக் கன்றுகள் தரப்படும்.

 

20) அகர்மரத்தில் செயற்கை முறையில் 7 ஆண்டுகளில் லாபம் அடையலாம் என்பது உண்மையா?

அகர்மரத்தில் நவீன விஞ்ஞான முறையில் மரத்திற்கு பூஞ்சை ஊசி முறையில் 7-8ஆண்டுகளில் லாபம் அடையலாம்.

 

21) அகர்மரம் மறுதாம்பு முறையில் வளருமா?

அகர்மரத்தின் ஆயுட்காலம் 40-45 ஆண்டுகள் எனவே இரண்டுமுறை மறுதாம்பு (Re-Growth) முறையில் வளரும்.

 

22) அகர்மரம் நிழல்சார்ந்த தோப்புகளில் வளருமா?

அகர் மரத்தின் சில ரகங்கள் மட்டும் எல்லா இடங்களிலும் வளர்ந்து அகர்ரெசீனையும்அகர் ஆயிலையும் கொடுக்கும். மற்ற ரகங்கள் மழைக்காடுகளில் மட்டுமே வளரக்கூடியது.

 

23) அகர்மரம் விவசாயிகள் தென்னந்தோப்புகளில் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். நீங்கள் அகர்மரக் கன்றுகள் கொடுப்பீர்களா?

அகர்மரம் தென்னந்தோப்புகளில் நன்கு வளரும். அகர்மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும்.

 

24) நிறுவனத்தின் மூலமாக அகர்மரம் வளர்த்தால் நிறுவனம் கொள்முதல் செய்து கொள்ளுமா?

கொள்முதல் செய்து கொள்ளும்..

 

25) அகர்மரம் வளர்க்கும் எல்லா விவசாயிகளும் சங்கத்தில் உறுப்பினர்களாக செயல்பட வேண்டுமா?

அகர்மரம் வளர்க்க அதிக தொழில்நுட்பம் தேவைப்படுவதால்,       நமது சங்கத்தில் இணைந்து உறுப்பினராகி பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

26) நிறுவனத்தின் சங்கத்தின் மூலம் அகர்மரம் மதிப்பீட்டுப்பொருட்கள் வாங்கித் தருவீர்களா?

அகர்மரத்தின் எல்லா மதிப்பீட்டுப் பொருட்களும் நிறுவனத்தின்  சங்கத்தின் மூலம் விற்கப்படும்.

 

27) அகர்மரம் சங்கத்தின் மூலமாக கொடுக்கும்போது வளர்க்கும் தொழில்நுட்பத்தை அளிக்குமா?

நமது சங்கம் நடவு முதல் அறுவடை வரை உள்ள எல்லாநிலைகளிலும் தேவையான தொழில்நுட்பத்தை அளிக்கிறது.

 

28) அகர்மரம் ஆயில் எடுக்கும் தொழிற்சாலை உள்ளதா? அது எந்த மாநிலத்தில் உள்ளது?

இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் அகர்ஆயில் எடுக்கும் தொழிற்சாலைகள் உள்ளது. மற்றும் வெளிநாட்டில் தாய்லாந்துஇந்தோனேசியாவியட்நாம் போன்ற நாடுகளிலும் உள்ளது.

 

29) அகர் ரெசின்,ஆயில் எதனுடன் சேர்க்கப்படுகிறது?

அகர் ரெசின்ஃஆயில் 400க்கு மேற்பட்ட வாசனை திரவியங்கள் தயாரிக்க மூலப்பொருட்களாகவும்மருத்துவ துறையிலும் மற்றம் அழகு சாதன பொருட்களில் மணமூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது.

 

30) அகர் மரம் உலகத்தில் அழியும் தருணத்தில் உள்ளதா?

அகர்மரம் இந்தியாவிலும்மற்ற உலக நாடுகளிலும் விரைவில் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளன. (CITES)

 

31) அகர்மரத்தின் உற்பத்தி தேவைக்கு உலக நாடுகளில் நிலை என்ன?

உலக நாடுகளில் அகர்மரத்தின் இன்றைய உற்பத்தியானது 5%  முதல் 10%  வரையே தேவையை பூர்த்தி செய்கிறது.

இதன் காரணமாகத்தான் கடந்த 50 ஆண்டுகளாக அகர்மரத்தின் மதிப்பு ஏறுமுகமாகவே உள்ளது.

 

32) அகர்மரம் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் விவசாயம் செய்யலாமா?

அகர்மரம் இந்தியாவில் இன்றைய நவீன தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி அனைத்து மாநிலத்திலும் விவசாயம் செய்யலாம்.

 

33) அகர்மரம் வளர்க்க அரசு துணை உள்ளதா?

அகர்மரம் வளர்க்க மத்திய அரசு மூலிகை மற்றும் நறுமணம் மரம் வளர்க்கும் மானியம் 75%  உள்ளது.

 

34) அகர்மரத்தின் சேவு மற்றும் கோந்து என்ன விலை?

அகர்மரத்தின் முதல் தரமான சேவு 1 கிலோ ரூ.25-ஆயிரம்இரண்டாம் தரம் 1கிலோ ரூ.10-ஆயிரம்அகர்மரத்தின் கோந்து 1 கிலோ ரூ.50-ஆயிரம் முதல் ரூ.30லட்சம் வரை சர்வதேச சந்தையில் விற்கப்படுகிறது.

 

35) அகர்வுட் ஆயில் 1 லிட்டர் சர்வதேச சந்தையில் என்ன விலை விற்கப்படுகிறது?

அகர்வுட் ஆயில் சர்வதேச சந்தையில் 1 லிட்டர் ரூ.50-ஆயிரம் முதல் ரூ.30-லட்சம் வரை விற்கப்படுகிறது.

 

36) அகர்மரத்தை தோப்பாக உள்ள மற்ற மரங்களோடு மரமாக வளர்க்கலாமா?

அகர்மரத்தை தோப்பாக உள்ள மற்ற மரத்தோப்புகளில் ஊடுமரமாக வளர்க்கலாம்.

 

37) அகர்மரம் வளர்க்க உரம், பூச்சி மருந்து செலவு உண்டா?

அகர்மரம் இயற்கையான காடுகளில் வளரும் என்பதால் பராமரிப்பு செலவு அதிகம் இல்லை.

 

38) அகர்மரம் எத்தனை ஆண்டுகளில் பயன்தரும்?

அகர்மரம் ரெசின் தயாரிக்க 7 முதல் 10 ஆண்டுகளும்அகர்வுட்டு ஆயில் தயாரிக்க12 முதல் 14 ஆண்டுகளும் ஆகும்.

 

39) அகர்மரம் உலக சந்தையில் அதிக வரவேற்பு உள்ளதா?

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக உலக சந்தையில் இதனுடைய மதிப்பிற்கு இணையாக எந்த ஒரு மரமும் இல்லை.

 

40) அகர்மரம் வளர்ப்போர் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டுமா?

 அகர்மரம் வளர்ப்போர் அரசாங்கதில் பதிவு செய்வது நல்லது.

 

41) அகர்மரத்தின் இலையின் பயன் என்ன?

அகர்மரத்தின் காய்ந்த இலையை தூளாக அரைத்து 1 கிலோ ரூ.600 என விற்கப்படுகிறது.

 

42) ஒரு ஏக்கரில் எத்தனை அகர்கன்றுகள் நடவு செய்யலாம்? அதன் அளவு?

ஒரு ஏக்கரில் 400 முதல் 600 கன்றுகள் வரை நடவு செய்யலாம். அளவு 10X10 அல்லது  8X8 இடைவெளி நடவு செய்யலாம்.

 

43) அகர்மரம் சொட்டுநீர் பாசன முறையில் வளர்க்கலாமா? அது வளர்ச்சி அதிகம் தருமா?

அகர்மரத்தை சொட்டுநீர் பாசன முறையில் வளர்ப்பது சிறந்த முறையாகும். அதன் வளர்ச்சியும் 20% அதிகரிக்கும்.

 

44) ஆர்டர் கொடுத்தால் நிறுவனம் மற்றும்  சங்கம் இணைந்து அனைத்து வேலைகளையும் செய்துக்கொடுக்குமா?

நமது நிறுவனமே சங்கமே மரம் வளர்க்க தேவையான அனைத்து வேலைகளும் முழுமையாக செய்துக்கொடுக்கும்.

 

உதாரணமாக.,

1) மண்பரிசோதனை செய்தல்

2) நேரடி பார்வையில் நிலத்தை தேர்வு செய்தல்

3) குழி எடுத்து நடவு செய்தல்

4) சொட்டுநீர்மற்றும் தெளிப்பு அமைத்தல்

5) சூரிய மின்வேலி அதை;துக்கொடுத்தல்

6) மரத்தின் வளர்ச்சியை கண்காணித்தல்

7) பூச்சி நோய் மேலாண்மை சரிசெய்தல்

8) நடவு முதல் அறுவடை வரை தொடர்ந்து ஆலோசனை மற்றும் விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் இன்றி (டீசழமநச) நேரடியாக சரியான விலைக்கு விற்றுக்கொடுத்தல்.

 

45) இந்தியாவில் அகர்மரம் தேவை எவ்வளவு?  விவசாயம் செய்யும் சதவீதம் என்ன?

இந்தியாவின் தேவை 100% உற்பத்தி செய்வது 5% சதவீதமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 

46) எந்த அடிப்படையில் அகர்மரம் நன்கு வளர்ந்து அகரையும், அகர்வுட் ஆயிலையும், தரும் என்று நீங்கள் விவசாயிகளுக்கு உத்திரவாதம் கொடுக்கிறீர்கள்?

கடந்த 15 ஆண்டுகளாக தென்னிந்தியாவின் சீதோஷ்நிலைக்கு ஏற்ற விவசாய நிலங்களில் மற்ற நாடுகளில் பயிரிட்டு முதல்தரமான அகரையும்அகர்வுட் ஆயிலையும் உற்பத்தி செய்து வெற்றிக்கண்ட நிறுவனங்களில் இருந்து பெறப்பெற்ற நாற்றுகளை வினியோகம் செய்வதால் நிறுவனம்ஃசங்கம் விவசாயிகளுக்கு உத்திரவாதம் அளிக்கிறது. மேலும்எந்தவகை அகர்மரம் நமது சீதோஷன நிலையில் நன்றாக வளரும் என்று 6 ஆண்டுகள் ஆராய்சிக்கு பிறகு பல சோதனைகளுக்கு பின் முடிவு செய்யப்பட்டபின்னரே அகர்நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

47) அகர்மரத்தை கொள்முதல் ஒப்பந்த சாகுபடி செய்ய நிறுவனம் சங்கம் எதனடிப்படையில் உத்திரவாதம் அளிக்கிறது.?

நமது நாட்டில் விவசாய நிலத்தில் வளர்க்க ஏற்ற மரமாகவும்அதிக லாபம் ஈட்ட மரமாகவும் இருப்பதாலும்உலக நாடுகளுக்கு இதன் தேவை பன்மடங்கு அதிகரித்துக்கொண்டே இருப்பதாலும் விவசாயிகள் இடைத்தரகளிடம் ஏமாற்றம் அடையாமல் இருப்பதற்கு இந்த ஒப்பந்த சாகுபடி முறையை நிறுவனம் சங்கம் மேற்கொள்கிறது.

 

48) சங்கத்தில் உறுப்பினர்கள் ஆவது எப்படி? அதனால் என்ன பயன் ?

சங்கத்தில் ஆண்டுச் சந்தா ரூ.250/- அல்லது ஆயுட்கால சந்தா ரூ.2500/- கட்டி உறுப்பினராகலாம்.

அரசு வழங்கும் மானியங்களையும்,மரம் வளர்ப்பு மற்றும் விற்பனை உதவிகளையும் சங்கம் உறுப்பினர்களுக்கு வழங்கும்.

ஊட்டம் அளிப்பது வேளாண்மைத் தகவல் ஊடகம்
RichFarmer Trees Plantation Private Limited © 2019