மலைவேம்பு


Online Shopping Cart and Payment Gateway : agridial shops - Shopping Cart Support by agridial.

Developed: AgriInfoMedia

மலைவேம்பு

கேள்வி - பதில்

1. மலைவேம்பு மரத்தின் தாவரவியல் பெயர் என்ன?

மிலியா டுபியா என்பது தாவரவியல் பெயர்

 

2. மலைவேம்பு மரம் எதற்கு பயன்படுகிறது?

பிளைவுட் தயாரிப்பதற்கும், கனரக வாகனங்களுக்கு  பாடி பில்ட்டர் செய்யவும், விறகின் ½ அங்குலம் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுகிறது. பேப்பர் மில்களில் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. பிளைவுட் கம்பெனியில் பிளைவுட்டின் மேல்  போர்த்தப்பட்டிருக்கும் பார்வை பிளேட்டிற்கும் பயன்படுகிறது

 

3. மலைவேம்பு இந்தியாவை தாயகமாகக் கொண்டதா?

மலைவேம்பு மரத்தின் தாயகம் இந்தியா

 

4. மலைவேம்பு மரம் எத்தனை ஆண்டுகள் கழித்து பயன்தரும்?

மூன்று முதல் 14 ஆண்டுகள் வரை பயன் தரும்.

 

5. வேம்புமரம் ஒரு மூலிகை மரமா?

 மலைவேம்பு மரம் ஒரு மூலிகை மரமே. மலைவேம்பு மரத்தின் இலை, பூ, காய், பட்டை, கோந்து, வேர் அனைத்தும் மூலிகை வைத்தியத்திற்கு பயன்படுகிறது.

 

6.ஒரு ஏக்கர் நிலத்தில் எத்தனை மலைவேம்பு மரங்களை நடவு செய்யலாம்?

1 ஏக்கர் நிலத்தில் 530 மரங்களை நடவு செய்யலாம்.

5 வருடம் கழித்து ஒருமரம் விட்டு ஒரு மரத்தை வெட்டி அதில் வருமானம் பெறலாம்.

 

7. மலைவேம்பு மரம் 1 ஏக்கரில் பயிர் இடும்போது எவ்வளவு இலாபம் கிடைக்கும்?

மலைவேம்பு மரம் அடர் நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு (6x6) 1200 மரங்கள் வரை நடவு செய்யலாம்.

  • 3 - 4 ஆண்டுகளில் 600 மரங்களை அறுவடை செய்து விறகு தேவைக்கு,தீக்குச்சி தயாரிக்க,விறகு எரித்து மின்சாரம் தயாரிக்க மேலும் பேப்பர் கூல் தயாரிக்க பயன்படுத்தினால் கூட (600x1000) ரூ.6 இலட்சம் வருமானம்.
  • 7 - 8 ஆண்டுகளில் அதில் பாதி (300) மரங்களை அறுவடை செய்து (300x6000) ரூ.18 இலட்சம் வருமானம் பெறலாம்.
  • 12 - 14 ஆண்டுகளில் மீதி உள்ள 300 மரங்களை அறுவடை செய்து (300x10000) ரூ. 30 இலட்சம் வருமானம் பெறலாம்.

8. மலைவேம்பு மரம் எத்தனை அடி உயரம் வரை வளரும்?

மண்ணின் தன்மைக்கேற்ப குறைந்தபட்சம் 35 அடிமுதல் அதிகபட்சம் 60 அடி உயரம்  வளரும் தன்மை கொண்டது

 

9. மலைவேம்பு மரம் வளர்க்கும் நிலத்தின் சந்தன மரத்தை இடைவெளியில் வளர்க்கலாமா?

மலைவேம்பு மரத்தின் வளர்ச்சி விரைவாக உயரச்செல்லக்கூடிய தன்மை கொண்டது.

சந்தனம் மெதுவாக வளரும் தன்மை கொண்டதால் தாராளமாக வளர்க்கலாம்.

 

10. மலைவேம்பு மரத்திற்கு அரசு மானியம் உண்டா?

மத்திய அரசு மூலிகை மர மானியம் ½ முதல் 20% கொடுக்கிறது.

 

11. மானாவாரி நிலத்தில் மலைவேம்பு மரம் வளருமா?

மானாவாரி நிலத்தில் மலைவேம்பு மரம் வளரக்கூடிய தன்மை கொண்டது.

 

12. மலைவேம்பு நட்ட தோட்டத்தில் ஊடுபயிர்கள் மற்றும் ஊடுமரம் வளர்க்கலமா?

வாழை, செடி வகைகள், கீரை வகைகள், மூலிகை செடி வகைகள், தானிய வகைகள், காய்கறி வகைகள் போன்றவற்றை மலைவேம்பு நட்ட தோட்டத்தில் 3 - 4 வருடங்களுக்கு ஊடு பயிர் செய்து கொள்ளலாம். சந்தனம்,அகர் மரங்களை ஊடுமரமாக வளர்க்கலாம்.

 

13. மலைவேம்பு மரத்தில்(டூப்ளிக்கெட்) துலக்க வேம்பு மரம் என்ற ரகம் உள்ளதா?  

டூப்ளிகெட் மலைவேம்பு மரம் என்ற ரகம் உள்ளது. அது அதிகம் வளராது. 3 ஆண்டுகளுக்கு மேல் வளர்ச்சி நின்று போய்விடும்.

 

14. மலைவேம்பு மரத்தின் பக்க கிளைகள் வளருமா?

மலைவேம்பு மரத்தில் 6 - 8 அடிக்கு மேல் வளரும்போது பக்க கிளைகள் வளரும்.

 

15. மலைவேம்பு மரத்தில் நோய் தாக்கம் இருக்குமா?

மலைவேம்பிற்கு நோய் அதிகம் வருவதில்லை. சிறிய இருக்கும்போது வெட்டுக்கிளிகள் சேதப்படுத்துகிறது.

சில இடங்களில் வேர் அழுகல் நோய் ஏற்படுகிறது.

 

16. எவ்வளவு ஆழம் குழி எடுத்து நடவு செய்ய வேண்டும்?

மண் தன்மையானது ஆழமாக உள்ள நிலத்தில் 1.5*1.5*1.5 அடி நீளம், அகலம், ஆழ குழி எடுத்தும் மண் தன்மை குறைவாக உள்ள இடங்களில் 2*2*2 அடி நீளம், அகலம், குழி எடுத்து நடவு செய்யலாம்.

 

17.மலைவேம்பு மரத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?

மலைவேம்பு மரத்தின் ஆயுட்காலம் 40/50 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது.

ஊட்டம் அளிப்பது வேளாண்மைத் தகவல் ஊடகம்
RichFarmer Trees Plantation Private Limited © 2019