சந்தனம்-பகுதி 2


Online Shopping Cart and Payment Gateway : agridial shops - Shopping Cart Support by agridial.

Developed: AgriInfoMedia

சந்தனம்-பகுதி 2

41.சந்தன மரத்தினை விவசாயிகளே தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய முடியுமா?

சந்தன மரத்தின் விற்பனை என்பது உலக வர்த்தகம் ஆகும்.அதனால் தான் அரசே அந்த முழுப் பொறுப்பை ஏற்று விவசாயிகளுக்கு உதவி செய்கிறது. சந்தன மரம் விற்பனையில் அதிகப் படியாக வருவாய் வருவதால் அரசு மூலமாக பெறும் போது வெள்ளைப் பணமாக கிடைக்கும். அதனால் விவசாயிகளுக்கும் பாதுகாப்பாக அமைந்து விடுகிறது.

42.சந்தன மரத்தை கவாத்து முறையில் வளர்த்தால் வைரம் அதிகமாக ஏறுமா?

கண்டிப்பாக அதிகமாக ஏறும்.மேலும் குறைந்த காலத்திலேயே மரம் முதிர்வு தன்மை அடைந்துவிடும்.

43.சந்தனம் வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்டதா?

சந்தனம் வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்ட மரமாகும்.

44.சந்தன மரம் உள்ள இடம் குளிர்ச்சியாக இருக்குமா?

காற்றை குளிர்விக்கும் தன்மை சந்தன மரத்திற்கு அதிகமாக இருப்பதால் சந்தன மரம் உள்ள இடத்தில் குளிர் அதிகமாக இருக்கும்.

45.சந்தன மரம் உவளர்ப்போ அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டுமா?

பட்டா நிலத்தில் சந்தன மரத்தினை நடவு செய்ய வேண்டும்.நடவு செய்த 6 மாதம் கழித்து கிராம நிர்வாக அலுவலரிடம் பயிர் அடங்கலில் பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு ஒன்றே போதுமானதாகும்.

46.சந்தன மரம் எத்தனை வகைப்படும்?

இந்தியாவில் விளையும் சந்தன மரத்தின் வகைகள்:

1.ருட் ஐ கிளாஸ்

2.ரூட் II கிளாஸ்

3.ரூட் III கிளாஸ்

4.ஜட்ஜ் போக்கல் I கிளாஸ்

5.ஜட்ஜ் போக்கல் II கிளாஸ்

6.சோட்லா

7.ஜீரியா

8.ஜெயின் பெக்கர்

9.அயன் போக்கல்

10.அயன் சில்டா

11.ஜர் சில்டா

12.அபிரியா

13.சாட்ப் சால்டா

14.மில்விடு சில்டா

15.பசோலா பக்கினி

16.ஸார்டு ரெஸ்ட்

17.ஸார்டு ருட்ஸ்

18.ஜார்புல் அட்

 

அயல்நாடுகளில் விளையும் வகைகள்:

1.Vilayed Both

2.China Both

3.Panjam

4.Katpattla(கட்பட்டலா)

5.Pakarjhh (பகர்தாத்)

47.எந்த வகையான கன்று விவசாயிகளுக்கு உகந்தது?

எல்லா சீதோஷண நிலையையும் தாங்கி வளரக்கூடிய சந்தனகன்றுதான் விவசாய நிலத்திற்கு ஏற்றதாகும்.

சந்தன மரத்தின் மதிப்பானது மண்ணிற்கு அடியில் மதிப்பு அதிகம்,அதனால் பூமிக்கு அடியில் நன்கு விளையக்கூடியதும்,மண்ணிற்கு மேலும் நல்ல வளர்ச்சி அடையும் ஜட்ஜ் போகல் ஐ கிளாஸ் இரகம் தான் விவசாய நிலத்திற்கு ஏற்றதாக உள்ளது.

48.சந்தன கன்றுகள் எத்தனை ஆண்டுகாலம் உயிர் வாழும்?

சந்தன மரத்தின் சராசரி ஆயுள் காலம் 40 / 45 ஆண்டுகள் ஆகும்

49.சந்தன இலையில் சந்தன வாசனை வருமா?

சந்தன இலையில் சந்தன வாசனை வராது.

50.சந்தன மரத்தில் எத்தனை ஆண்டு கழைத்து வைரம்(சேவு) ஏற ஆரம்பம் ஆகும்?

சந்தன மரத்தில் 4 ஆண்டு கழித்து சேவு ஏற ஆரம்பம் ஆகும்.

51.சந்தன மரத்தில் எந்த பாகத்தில் ஆயில் எடுக்க பயன்படுகிறது?

சந்தன மரத்தின் வைரக் கட்டை மற்றும் வேர்ப்பகுதியில் இருந்து ஆயில் எடுக்கப்படுகிறது.

52.சந்தன மரத்தை ஒரு விவசாயி விற்பனை செய்ய உரிமை இருக்கிறதா?

சந்தன மரத்தை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு முழு உரிமை உண்டு.

53.சந்தன மரத்தை விலை நிர்ணயம் செய்வது யார்?

பப்ளிக் டெண்டர் மூலமாக விலை நிர்ணயம் நடைபெறூம்,ஆனால் விவாசாயியின் முழு சம்மதத்துடன் தான் விற்பனை செய்ய முடியும்.விலை கட்டுப்படி இல்லை என்றால் 6 மாதமோ அல்லது 1 வருடம் கழித்தோ விற்பனை செய்ய விவசாயிக்கு முழு உரிமை உண்டு.

54.சந்தன மர விற்பனை(பப்ளிக் டெண்டர்) எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?

பப்ளிக் டெண்டர் மாதா மாதம் நடைபெறுகிறது.

55.சந்தன மரத்தை விற்பனை செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது?

மாவட்ட வன அலுவலருக்கு முழு அதிகாரம் உள்ளது.

56.எந்த வகை சந்தன மரத்தில் பர்னிச்சர் செய்ய முடியும்?

பர்னிச்சர் செய்ய 15 வருடங்களுக்கு மேல் வயதுடைய மரத்தில் இருந்துதான் தயாரிக்க முடியும்.

57. 1 ஏக்கரில் எத்தனை சந்தன மரங்கள் நடவு செய்யலாம்?

8x8 அடி இடைவெளியில் 680 மரங்களையும்,

9x9 அடி இடைவெளியில் 537 மரங்களையும் நடவு செய்யலாம்.

58. ஒரு ஏக்கரில் சந்தனம் குறைந்த முதிர்வில் எவ்வளவு வருவாய் கிடைக்கும்?

ஒரு மரத்தில் குறைந்த அளவு 30 கிலோ சந்தன கட்டை கிடைத்தாலும் 550x30=16500 கிலோ. ஒரு கிலோ சந்தன கட்டை சராசரியாக ரூ.5000 விற்பனை ஆனால் கூட 16500x5000=ரூ.8,25,00,000./- அதில் பாதி அளவு கிடைத்தால் கூட ஏக்கருக்கு 4 கோடி ரூபாய் வருவாய் கண்டிப்பாக ஈட்டலாம்.

59.சந்தன கன்றுகளை எந்த நோய் தாக்கும்?

1.இலையுண்ணி பூச்சிகள்

2.இலையுண்ணும் வண்டுகள்

3.வெட்டுக்கிளிகள்

4.சாறு உரிஞ்சும் பூச்சிகள்

5.துளைப்பான்கள்

6.வேர்க்கரையான்கள்

60.சந்தனத்திற்கு அடியுரமாக எதை இடவேண்டும்?

நன்கு மக்கிய சாண எரு வேப்பம் புண்ணாக்கு,மண்புழு உரம் வரை கரையான் தொல்லையில் இருந்து மரத்தை பாதுகாக்கலாம்.

61.எனக்கு நிலம் இல்லை, ஆனால் நான் சந்தன விவசாயம் செய்ய முடியுமா?

சந்தனைத்தை நில உரிமையாளரும் வளர்க்கலாம். அல்லது குத்தகைதார்ரும் வளர்க்கலாம். அதாவது குத்தகை ஒப்பந்தம் செய்து சந்தன மரத்தினை வளர்க்கலாம். அவ்வாறு வளர்த்தால் குத்தகைதார்ருக்கே சந்தன மரம் சொந்தமாகும்.

62.சந்தன மரத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய முடியுமா?

5 வருடங்களுக்கு மேல் ஆன சந்தன மரத்திற்கு காப்பீடு செய்யலாம்.

63.மத்திய அரசு நலவாரியம் 2000 ஆம் ஆண்டு அமைத்தது.அதில் சந்தனம் இடம் பெற்றுள்ளதா?

மத்திய அரசு நலவாரியம் 2000 ஆம் ஆண்டில் சந்தன மரம் இடம் பெற்றுள்ளது.

64.தமிழ்நாட்டில் எந்த எந்த ஆண்டு சந்தனம் மரம் வளர்க்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது?

அரசு ஆணையானது 2002 ஆம் ஆண்டு மற்றும் 2008 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

65.வனத்துறையினருக்கு விவசாயிகள் எவ்வளவு வரியும்,சந்தனம் விற்றுக் கொடுக்கும் செலவும் கட்ட வேண்டும்?

சந்தன மரத்தினை  விற்பனை செய்யும்போது அதன் முழு மதிப்பீட்டில் 10% தொகையும்,கட்டிங் எடுத்து விற்பனை செய்யும் செலவிற்காக 10% கட்ட வேண்டும்.

66.சந்தனத்தை சாகுபடி செய்யும் போது அரசு எந்த முறைப்படி பணத்தை பட்டுவாடா செய்யும்?

மரத்தின் உரிமையாளருக்கு மொத்த விலையில் 20 வீதம் 30 நாட்களுக்குள்ளும்,மீதித்தொகை 90 நாட்களுக்குள்ளும் தரப்பட வேண்டும்.

67.விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமை வனத்துறையினருக்கு உள்ளதா?

சந்தன மரங்கள் பெரிதாகி அதன் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க ஒரு சில ஏரியாக்களில் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட வனத்துறை அலுவலரிடம் விண்ணப்பம் கொடுத்து பாதுக்காப்பிற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். சந்தன மரத்தை பாதுக்காப்பது வனத்துறையினரின் முழு பொறுப்பாகும். அனைத்து மரங்களுக்கும் வனத்துறையினர் பாதுகாப்பு செய்வார்கள்.

68.சொட்டு நீர் பாசனம் அமைத்து சந்தன மரத்தை வளர்க்கலாமா?

சொட்டு நீர் பாசனத்தில் சந்தன மரத்தை வளர்த்தால் சந்தன மரத்தின் வளர்ச்சி 15% முதல் 20% வரை வளர்ச்சி கூடுதலாக இருக்கும். சொட்டு நீர் பாசனத்தினால் மிக குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. தேவையான செடிக்கு மட்டும் தண்ணீர் போவதால் தேவையற்ற களைகள் முளைப்பதில்லை. அதனால் தோட்டத்தின் பராமரிப்பு மிக குறைவு. அதிகமான ஏரியாவை பாரமரிப்பதற்கு சொட்டு நீர் பாசனமே சிறந்த வழியாகும்.

69.பாதுகாப்பிற்கு சூரிய மின்வேலி அமைக்கலாமா?

1.   ஆடு மாடுகளிடம் இருந்து தோட்டத்தை பராமரிப்பதற்கும்

2.   மரத்தின் மதிப்பு அதிகம் ஆகும்போதும் சூரிய மின்வேலி அமைத்து பாராமரிப்பதே சிறந்த வழியாகும்.

70.என் நிலத்தில் வளரும் சந்தன மரத்தை சட்டத்தை மீறி யாரோ வெட்டினால் நான் எப்படி புகார் செய்வது?

சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். மரங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்தால் 30 நாட்கள் கழித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். சந்தன மரத்தின் மதிப்பானது பூமிக்கு மேல் பகுதியில் 30% பூமிக்கும் கீழ் 70% மதிப்பு தன்மை கொண்ட்தாகும். பூமிக்கு மேல் உள்ள மரம் வெட்டப்பட்டால் பூமிக்கு கீழ் உள்ல வைரத்தின்(கட்டை) மதிப்பு மேலும் அதிகரிக்கும்.

71.வனத்துறை மாவட்டம் தோறும் செக் போஸ்ட் அமைத்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்குமா?

சந்தன மரத்தால் அன்னிய செலவாணி அதிகம் ஈட்டி தருவதாலும் அரசுக்கு வருவாய் அதிகரிப்பதாலும் சந்தன மரத்தினை தெசிய சொத்தாக கருதுவதாலும் அரசு வனத்துறையின் மூலம் கண்டிப்பாக சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு செய்து தரும். அது அவர்களின் கடமையும் ஆகும்.

72.ஒரு ஏக்கரில் சராசரி எத்தனை டன் சந்தனம் எத்தனை வருடதில் விளையும்?

12 / 14 வருடத்தில் ஒரு மரத்தில் வைரம் (கட்டை) 30 கிலோ கிடைத்தாலும் ஏக்கருக்கு 53x30=15900 கிலோவாகும். 12 / 17 வருடம் வளர்த்தால் ஒரு மரத்தின் வரைம் 60 கிலோ கிடைக்கும்.அதாவது 31 டன் உறுதியாக இருக்கும்.

73.அனைத்து பட்ட நிலத்திலும் சந்தனம் வளர்க்கலமா?

அனைத்து பட்டா நிலத்திலும் சந்தனம் வளர்க்கலாம். வீடு,பள்ளி,கல்லூரி,தொழிற்சாலைகளில் உள்ள காலி இடங்கள் மற்றும் அனைத்து விவசாய பட்டா நிலங்களிலும் வளர்க்கலாம்.

74.இந்தியாவில் அனைத்து மாநிலத்திற்கும் சந்தன வளர்ப்பு அரசு ஆணை உள்ளதா?

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திற்கும் சந்தன மரம் வளர்க்கும் அரசு ஆணை உள்ளது.

75. 2011 ஆண்டு சந்தனத்திற்கு என்ன விலை நிர்ணயம் செய்யப்பட்ட்து?

ஒரு கிலோ சந்தன கட்டை அதிகபட்சமாக ரூ.7500/-

76. 5 ஆண்டுகள் கழித்து சந்தன மரத்தின் கவாத்து செய்யும் கழிவுகலை யார் அனுபதி பெற்று பொது மக்களுக்கு விற்பனை செய்யலாம்?

மாவட்ட வனத்துறை அலுவலரின் அனுமதி பெற்று விற்பனை செய்யலாம்.

77.கவாத்து செய்த சந்தன குச்சிகளை விற்க வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டுமா?

அனுமதி பெற்றுதான் விற்பனை செய்ய வேண்டும்.

78. மூலிகை சம்மந்தப்பட்ட அனைத்து விதமான பொருட்களை காட்டில் இருந்து வெளியே கொண்டு வர மலைவாழ் பழங்குடியினருக்கு அதிகாரம் இந்திய அரசால் அளித்துள்ளது என்பது உண்மையா?

உண்மையே

79.எந்த நாட்டில் விளையும் சந்தனத்திற்கு ஆயில் அதிகம் எடுக்க முடியும்?

இந்திய சந்தனத்திற்கு தான் ஆயில் அதிகம் கிடைக்கும். தரமானதாகவும் இருக்கும்,குறிப்பாக தமிழ்நாட்டில் விளையும் சந்தனத்திற்கு தான் ஆயில் தன்மையும் வாசனையும் அதிகம் இருக்கும்.

80.நறுமணம் அதிகம் வீசும் சந்தனத்திற்கு பெயர் என்ன?

வாசனை சந்தனம் அல்லது ஜவ்வாது சந்தனம்

81.சந்தன மரம் அதிவேகமாக வளரக்கூடியதா?

சந்தனம் மெதுவாக வளரக்கூடிய மரமாகும்.குறிப்பாக வேம்பின் சாராசரி வளர்ச்சி அளவுக்கு சந்தனம் இருக்கும்.

82.எங்கள் வீடுகளில் வளர்க்கும் சந்தன மரத்தினை அரசுக்கு வரி கட்டிவிட்டு வெட்டிக்கொள்ளலாமா?

வரி கட்டி விட்டு நாம் பயன்படுத்திக் கொள்ள நமக்கு உரிமை உண்டு.

83.சந்தன கன்று நடவு செய்யும் பருவகாலம் உண்டா?

சந்தன கன்று நடவுக்கு எல்லா பருவகாலமும் உகந்ததே.

மானாவாரியான நிலங்களில் அனைத்து காலங்களிலும்

தோட்டத்தில் அதிகம் மழை பெய்யும் காலத்தை தவிர்த்தும் நடவு செய்ய வேண்டும்.

84.மழைநீர் தேங்கி இருக்கும் நிலத்தில் சந்தனம் பயிர் நடலாமா?

வடிகால் வசதியுள்ள நிலத்தில் நடவு செய்யலாம.

குறைந்த பட்சம் 2 / 3 வாரங்களுக்கும் அதிகபட்சம் 3 / 4 வாரம் வரை நீர் தேங்கி நிற்கும் காலக்கட்டத்தில் நடவு செய்வதை தவிர்த்து விட வேண்டும்.

85.வேப்பம் (வேம்பு) மரமும் சந்தன மரமும் ஒரே குடும்ப வகையைச் சார்ந்த்து?

வேம்பும் சந்தனமும் ஒரே குடும்ப வகையைச் சார்ந்தது.வேம்பு எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கு சந்தனமும் வளரும்.

86.சந்தன மரத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய முடியுமா?

5 / 7 ஆண்டுகள் வளர்ந்த சந்தன மரங்களுக்கு காப்பீடு செய்யும் வசதியுள்ளது.

87.சந்தனத்தை எவ்வளவு ஆழம் குழி எடுட்து நடவு செய்ய வேண்டும்?

மண் தன்மை ஆழமாக உள்ள நிலத்தில் 1x1x1 அடி நீளம் அகலம் ஆழம் குழி எடுத்தும்,

மண் தன்மை ஆழத்தில் குறைவாக இருந்தால 2x2x2 நீளம் அகலம் ஆழம் குழி எடுத்து நடவு செய்யலாம்.

88.குழி மூடுவதும் சந்தனம் நடவு செய்வதும் ஒன்றாக செய்யலாமா?

குழி எடுத்து இரண்டு நாள் கழித்து பூமியின் மண், எரு,வேப்பம் புண்ணாக்கு கலந்து மூடி தண்ணீர் விட்டு பிறகுத் நடவு செய்ய வேண்டும்.

89.நடவு செய்ய ஏற்ற நேரம் எது?

மாலை நேரத்தில் நடவு செய்வதே மிக சிறந்த வழியாகும்.வெயில் இல்லை என்றால் காலையில் நடவு செய்யலாம்.

90.நாற்று இடம் மாற்றம் செய்து எத்தனை நாட்கள் கழித்து நடவு செய்ய வேண்டும்?

குறைந்தது 10 நாட்கள் அல்லது இரண்டு வாரம் கழித்து மாற்றப்பட்ட ஏரியாவில் தண்ணீர் விட்டு அந்த சீதோஷண நிலைக்கு மாற்றம் செய்து நடவு செய்ய வேண்டும்.

91.பாதுகாப்பிற்காக தாங்கள் காட்டும் உச்ச கட்ட வழிமுறை?

சந்தன மரம் வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்ட மரம். அதனால் 4 / 5 ஆண்டுகள் கழித்து வருடத்திற்கு ஒரு முறை தரையோடு வெட்டி விட வேண்டும். அவ்வாறு செய்தால் பூமிக்கு அடியில் வேர்கட்டை நன்கு குறைந்த காலத்திலேயே முதிர்வு தன்மை பெற்று மரம் விளைந்து விடும் பாதுகாப்பு பிரச்சனை என்பதே இந்த முறையில் மரம் வளர்த்தால் இல்லவே இல்லை.

92.ஆர்டர் கொடுத்தால் நீங்களே அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பீர்களா?

·         ஆர்டரின் பேரில் நிறுவனமே ஆட்களை வைத்து குழி எடுத்து நடவும் செய்து கொடுக்கும்.

·         மேலும் தோட்டத்தை சுற்றி சூரிய மின்சார வேலி அமைத்தும்

·         சொட்டு நீர் பாசன வசதியையும் அமைத்து கொடுக்கும்.

சந்தன கன்றின் விலை நிலவரம் என்ன?

ஒரு சந்தன கன்று

6–9 மாதம் ஆனது

ரூ.32-37

10–12 மாதம் ஆனது

ரூ.45-55

14–18 மாதம் ஆனது

ரூ.60-75

20–24 மாதம் ஆனது

ரூ.90-110

30-36 மாதம் ஆனது

ரூ.250-280

பகுதி - 1 படிக்க...

ஊட்டம் அளிப்பது வேளாண்மைத் தகவல் ஊடகம்
RichFarmer Trees Plantation Private Limited © 2019