சந்தனம்-பகுதி 1


Online Shopping Cart and Payment Gateway : agridial shops - Shopping Cart Support by agridial.

Developed: AgriInfoMedia

சந்தனம்-பகுதி 1

1.இந்தியாவில் சந்தனம் எந்த மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது?

சந்தன மரம் இந்தியாவில் அதிகமாக தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திர பிரதேசம்,மகாராஷ்டிரா,ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காணப்படுகிறது.

2.தமிழ்நாட்டில் எந்த மாநிலத்தில் சந்தன மரம் அதிகம் காணப்படுகிறது?

திருவண்ணாமலை,சேலம்,தர்மபுரி,நாமக்கல்,திண்டுக்கல் மற்றும் வேலூர் மாவட்டங்களில் அதிக அளவிலும் மற்ற மாவட்டங்களில் குறைந்த அளவிலும் சந்தன மரம் காணப்படுகிறது.

3.தமிழ்நாட்டில் எந்த வகையான சந்தனமரம் வளர்கிறது?

தமிழ்நாட்டில் எல்லாவகையான சந்தனமரமும் வளர்கிறது.

4.விவசாயிகள் எந்த நிலத்தில் சந்தனம் பயிரிடலாம்?

மானாவாரி நிலங்களிலும்,வடிகால் வசதியுள்ள விவசாய நிலங்களிலும் பயிரிடலாம். சந்தன மரத்தின் குடும்ப வகையை சார்ந்த வேம்பு எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கெல்லாம் சந்தன மரமும் வளரும்.

5.சந்தன கன்றுக்கு அரசு மானியம் வழங்குகிறதா?

மத்திய அரசு மானியம் 75% அளிக்கிறது. குழி எடுக்கும் செலவு,நடவு செலவு,உரச்செலவு, நாற்று வாங்கும் செலவு என மொத்த செலவில் 75% ஆகும்.

6.சந்தன மரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா?

சந்தன மரங்களை விற்பனை செய்யும்போது விற்பனை வரி செலுத்த வேண்டியுள்ளதால் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் வனத்துறையினர் விவசாயிகளுக்கு ( மாதம் மாதம் நடக்கும் டெண்டர் மூலமாக) விற்பனை செய்து தருகிறார்கள். அதனால் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் விற்பனை செய்து தரப்படும்.

7.சந்தன மரத்தை மாவட்ட வனத்துறையினர் விற்பனை செய்து தருவார்களா?

சந்தன மரங்களை கட்டிங் செய்து ரகம் பிரித்து அதன் கழிவுகளை நீக்கியும், மரத்தின் உரிமையாளரின் ஒப்புதலோடு விலை நிர்ணய சம்மதத்தோடு மாவட்ட வனத்துறையின விற்று தருவார்கள்.

8.சந்தன ஆயில் எடுக்கும் தொழிற்சாலைகள் உள்ளதா? எந்த மாநிலத்தில் உள்ளது.?

ஆயில் தொழிற்சாலை உள்ளது. அது தமிழ்நாடு,கேரளா,பாண்டிசேரி,குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளது.

9.சந்தன் மரத்தில் என்னென்ன பொருட்கள் உருவாக்கப்படுகிறது?

சந்தன கட்டை துவர்ப்பு மருந்தாகவும், கசப்பு சுவையுடனும் குளிர்த்தன்மை கொடுக்க கூடியதாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி தருவதற்காகவும் பயன்படுகிறது.

சந்தன கட்டையில் சித்திர வேலைபாடுகளுக்கும், கதவுகள், பேனா தாங்கிகள்,பேப்பர் வெயிட்டுகள்,கத்திகள்,புகைப்பட பிரேம்கள் ஆகிய பொருட்கள் செய்யப்படுகின்றன. மேலும் சந்தன பவுடர்,சந்தன சோப்பு மறும் அகர்பத்தி தயாரிக்கப்படுகிறது. சந்தன மரமானது சந்தனம் தயாரிக்கவும் துணி வகைகள் மற்றும் அலமாரிகள் ஆகியவற்றிற்கு வாசனை பொருளாக பயன்படுகிறது.

10.சந்தன் ஆயில் எது எதோடு சேர்க்கப்படுகிறது?

சந்தன மரத்தூளை ஆவியாக்கி பிரித்தல மூலம் எடுக்கப்படும் ஈஸ்டு இந்தியன் சேண்டல் வுட் ஆயில் மிகவும் இனிய நறுமணம்,வாசனை,வெதுவெதுப்பான தன்மை மற்றும் அதன் தனித்துவம் ஆகியவற்றால் அதிக விலை மதிப்பை பெற்றுள்ளது.

சந்தன எண்ணெய் அதிக அளவில் மற்ற வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பகுதி பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சந்தன எண்ணெயுடன் மற்ற வாசனைப் பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியங்களே அதிக தரமுள்ளதாக உள்ளது.

11. சந்தன இந்தியாவில் அழியும் தருணத்தில் உள்ளதா?

சந்தன உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும் அதற்கு அடுத்தபடியாக இந்தோனேசியா உள்ளது. தற்போதைய நிலவரப்படி சந்தன மரத்தின் தேவையானது ஆண்டிற்கு 5000 முதல் 6000 மெட்ரிக் டன்கள், அதில் 2.3 பங்கு இந்திய சந்தனத்திற்கு தான்.

இந்தியாவை பொருத்த வரையில் மரத்தின் உற்பத்தியானது ஆண்டுதோறும் குறைந்து கொண்டுதான் வருகிறது. தற்போது அழியும் தருவாயில் உள்ளது. இதனை கீழ்கண்ட புள்ளி விவர அட்டவணை விளக்குகிறது.

ஆண்டு

உற்பத்தி / டன்

1960

4000

1990

2000

2000

1000

தற்போது

500 டன்கள்

தற்போது அதிகரித்து வரும் சந்தன மரத் தேவையால் இதன் மதிப்பும் அதிகரித்து வருகிறது.

இதனை கீழ்கண்ட புள்ளி விவர அட்டவணை தெளிவாக விளக்குகிறது.

 

ஆண்டு

விலை / டன் (ரூபாயில்)

1909

365

1933

1000

1965

6000

1970

10000

1987

31000

1990

78000

1999/2000

37 இலட்சம்

2007

45 இலட்சம்

இப்பற்றாக்குறைய போக்கவும் விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படவும் அரசாங்கமானது தனது கட்டுப்பாடுகளை தளர்த்தி காடுகளில் மட்டும் உற்பத்தியான சந்தன மரத்தின் உற்பத்தியை அதிகரிக்க விவசாய நிலங்களிலும் விளைவிக்கலாம் என அரசு ஆணை வழங்கியுள்ளது.

12. சந்தன மரத்தினை இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் விவசாயம் செய்யலாமா?

அனைத்து மாநிலங்களிலும் சந்தன மரம் வளர்க்கலாம். விற்பனை வரி மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

13.சந்தன மரத்தை வளர்க்க அரசு ஆணை உள்ளதா?.

விவசாய நிலத்தில் சந்தன மரத்தினை வளர்க்க 2002 அரசு ஆணையும் 2008 அரசு ஆணையும் உள்ளது.

14.இந்தியாவில் சந்தன கட்டை ஒரு கிலோ அரசு விலை எவ்வளவு?

சந்தன மரத்தின் தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ ரூ.2500 முதல் ரூ.7500 வரை விற்பனை ஆகிறது.

15.ஒரு லிட்டர் சந்தன ஆயில் என்ன விலை?

சந்தன ஆயில் தற்போது 1 லிட்டர் ரூ.70000 முதல் 190000 வரை விலை போகிறது.

16. சந்தன மரம் வளர்க்க் துணை செடி வளர்க்க வேண்டுமா?

சந்தன மரமானது 3 ஆண்டு முதல் 4 ஆண்டு வரை நைட்ரஜனை உற்பத்தி செய்து கொள்ளும் தன்மை அதற்கு இல்லை. அதனால் வேர் முடிச்சுகளில் ஹைட்ரஜனை சேகரித்து வைக்கும் தன்மை கொண்ட துணை செடியினை அருகில் வளர்த்தால் தான் சந்தன மரம் வளரும்.

17. சந்தன மரம் ஒட்டுண்ணி அல்லது சாருண்ணி வகையினை சாந்துள்ளதா?

சந்தனம் மரம் ஒட்டுண்ணியோ அல்லது சாறுண்ணி வகையையோ சார்ந்தது இல்லை.

18.சந்தன மரத்தோடு துணைமரம் வளர்ப்பது எதற்காக?

சந்தன மரம் வளர்க்க ஆரம்ப காலத்தில் நிழல் தேவைப்படுகிறது. அதனால் சந்தன மரத்திற்கு இடைவெளியில் குமிழ்மரம் அல்லது மலைவேம்பு மரம் வளர்க்கலாம். சந்தன மரத்தின் குறைந்த முதிர்வு காலம் 12/14 ஆண்டுகள் ஆகும். அதனால் இடை வருமானம் ஈட்டவும் துணைமரம் உதவியாக உள்ளது. அதாவது குமிழ் கட்டிங் 6 ½ / 7 ஆண்டுகள், மலைவேம்பு 7 / 9 ஆண்டுகள்.

19. சந்தன விதை எவ்வாறு தேர்வு செய்கிறீகள்?

சந்தன விதை தேர்வு செய்வது மிகவும் முக்கியமான செயலாகும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் ஆன மரத்தில் தான் தரமான விதை கிடைக்கும்.

20. எந்த வகையான மரத்திலிருந்து (இரகம்) விதை தேர்வு செய்ய வேண்டும்?

அதிக ஆயில் தன்மையும் அதிக வாசனையும் உடைய மரத்தில் இருந்து விதை தேர்வு செய்தால தான் விளைச்சலும் இலாபமும் உறுதி செய்யப்படும்.

21.சந்தன விதை எத்தனை நாட்களில் முளைக்கும்?

சந்தன விதை 32/45 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை முளைக்கும் தன்மை கொண்டது.

22.விவசாயிகள் எத்தனை மாதம்  வளர்ந்த சந்தன் கன்றுகளை நடவு செய்யலாம்?

1 வருடம் ஆன,அதற்கு மேலும் உள்ள சந்தன கன்றுகளை மட்டுமே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

23. ஒரு வருடம் ஆன சந்தன கன்றுகள் எந்த நிலையிலும் வளரக்கூடியதா?

ஒரு வருடமும் அதற்கு மேலும் வளர்ந்த சந்தனக் கன்றுகள் தான் பல்வேறு வகையான சீதோஷண நிலையினை தாங்கி வளரும் தன்மை கொண்டது.குறைந்த பராமரிப்பே போதுமானது.

24.இயற்கை வேளாண் முறையில் சந்தனம் கன்றுகளை வளர்ந்து தருவீர்களா?

தரமான சந்தன கன்று என்பது இயற்கை வேளாண் முறைப்படி வளரந்த சந்தன கன்றுகள் தான். இயற்கை வேளாண் முறைப்படியும் ஆர்கானின் முறைப்படியும் தான் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

25.சந்தன மரம் வளர்க்கும் விவசாயிகள் சங்கம் உள்ளதா?

உள்ளது அதன் பெயர் “தென்னிந்திய நறுமண / சந்தன மூலிகை மரம் / பயிர் வளர்ப்போர் விவசாயிகள் சங்கம். அரசு பதிவு எண்: 34.VPM.2011

26.வெளிநாட்டில் உள்ள எங்களுக்கு சந்தன மரக் கன்றுகளை அனுப்பி வைப்பீர்களா?

வெளிநாட்டிற்கு தரமான சந்தன கன்றுகளை அனுப்பி வைக்கிறோம். தரமான விதைகளையும் அனுப்பி வைக்கிறோம்.

27.நீங்கள் உற்பத்திக்கு பயன்படுத்தும் சந்தன விதைகள் விலைக்கு கிடைக்குமா?

விதைகள் விற்பனைக்கு உண்டு.

28.சந்தன மரம் மூலிகை மரம்தானா?

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சித்தரகளால் கண்டறியப்பட்ட சந்தன மரமானது சித்த வைத்தியத்திற்கு மூலிகையாகப் பயன்படுகிறது.

சந்தனம் அதன் நறுமணம் குணம் இன்றி மருத்துவ குணங்களை பெற்றுள்ளன. தோல் சம்மந்தப்பட்ட நோய்களுக்காக களிம்புகள், தீக்காயங்கள் மற்றும் அழுகளை தடுக்கும் மருந்துகள் ஆகியவற்றை தயாரித்தலில் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

29.எந்த வைத்திய முறைல் சந்தனத்தை பயன்படுத்துகிறார்கள்?

உடல் உஷ்ணத்தை தணிக்க, உஷ்ணத்தால் உண்டாகும் நோயை குணப்படுத்த சித்த வைத்திய முறையில் பல மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

30.சந்தன மரத்தில் சித்திர வேலைப்பாடுகள் நடக்கும் முக்கிய இடங்கள் எங்குள்ளது?

அங்கோலா,பெங்களூர்,கொன்னவார்,கும்தா,மைசூர்,சாகர்,சோரப்,கிர்ஸி,தால்குப்பா,திருப்பதி,சூரத், தமிழ்நாடு மற்றும் உத்திரபிரதேசத்தில் சில இடங்களில் ஆகும்.

31.இந்தியாவில் அதிகம் சந்தன சோப்பு தயாரிக்கும் கம்பெனியின் பெயர் சொல்ல முடியுமா?

மைசூர் சாண்டல் சோப்பு

32.சந்தன சோப்பு உடம்புக்கு குளிச்சியை தருமா?

 நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது.

33.சந்தன கன்று வளரும் தருணத்தில் வேர்க்கரையான் தாக்கும் வாய்ப்பு உள்ளதா?

ஒரு சில ஏரியாக்களில் வேர் கரையான் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.

அதனால் நடவு செய்யும்போதே குழிக்கு 200 கிராம் நயமான வேப்பம் புண்ணாக்கு கலந்து நடவு செய்தால் முழுமையாக வேர்க்கரையானை கட்டுப்படுத்தலாம்.

34.மண் பரிசோதனை செய்த நிலத்தில் சந்தன பயிர் செய்வது சிறந்த முறையா?

மண்ணில் கார அமில தன்மையை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்ப் போல் நிலத்தை சீர் செய்து நடவு செய்தால மரம் நன்றாக வளரும்.

35.சந்தன மரம் எத்தனை ஆண்டுகளில் பயன் தரும்?

தரமான தாய் மரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட நாற்றுக்களை பயன்படுத்தி கவாத்து முறையில் சந்தன மரத்தினை வளர்த்தால் 10 / 12 ஆண்டுகளில் முதிர்வு தன்மைக்கு வந்துவிடும். தேவைப்பட்டால் அதிக ஆண்டுகள் வளர்க்கலாம்.

36.சந்தன மரம் உள்ள இடங்களில் அதிகம் மழை பெய்யுமா?

பொதுவாகவே சந்தன மரங்களுக்கு காற்றை குளிர்விக்கும் தன்மை அதிகம் உள்ளது. அதனால் சந்தனமரம் அதிகம் உள்ள ஏரியாவில் கண்டிப்பாக மழை அதிகமாக பெய்யும்.

37.சந்தன மரம் உலக சந்தையில் அதிக வரவேற்பு அடைந்துள்ளதா?

சந்தன ஆயிலுக்கு நிகரான ஒரு ஆயில் இதுவரை எதுவும் இல்லாததாலும்,சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுவதாலும் உலக சந்தையில் சந்தனத்தின் மதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

38.எந்த நாட்டிற்கு சந்தன மரம் அதிகம் தேவைப்படுகிறது?

உலகத்தில் ஆசியா கண்டம், ஆப்பிரிக்கா கண்டம்,ஆஸ்திரேலியா கண்டம் மேலும் முக்கியமாக இஸ்லாமியர்கள் வாழும் நாட்டிற்கு அதிகமாக தேவைப்படுகிறது.

39.சந்தன கன்று நடவு செய்த நிலத்தில் ஊடுபயிர் செய்யலாமா?

சந்தம மர நடவு செய்த தோட்ட்த்தில் ஒரே காலகட்டத்தில் 5 அடுக்கு வருமானம் பெறலாம்.

i)         சந்தனத்துடன் குமிழ் மரத்தினையும்

ii)        குமிழ் மரத்தில்

iii)       மிளகு காப்பியையும்,மேலும்

iv)       வாழையையும்

v)        மூலிகை பயிரான எளிதில் வருமானம் தரக்கூடிய மணத்தக்காளி,முருங்கைக்கீரை,அரைக்கீரை, தண்டு கீரை, பொன்னாங்கன்னி,சிறுகீரை செடி வகையான் மருதாணி,செம்பருத்தி,கருவேப்பிலை,துளசி,வல்லாரை ஆகியவைகளை மரத்தோட்டத்தில் ஊடுபயிராக வளர்த்து பயன் பெறலாம்.

40.நீங்கள் சந்தன கன்று எந்த முறையில் உற்பத்தி செய்கிறீர்கள்?

ஏதோ ஒரு சந்தன மரத்தில் இருந்து விதை தேர்வு செய்து கன்று உற்பத்தி செய்தால் மரத்தொட தரத்திற்கும் அதன் முதிர்வு தன்மைக்கும் உத்திரவாதம் அற்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனால் விதை தேர்வு செய்யும் தாய் மரமானது தரம் பிரிக்கப்பட்ட கிராப் வகையைச் சார்ந்த்தாகும்.அதனால் வாசனையும் தரமும்  உறுதி செய்யப்படுகிறது.

மேலும் படிக்க.. பகுதி-2..

ஊட்டம் அளிப்பது வேளாண்மைத் தகவல் ஊடகம்
RichFarmer Trees Plantation Private Limited © 2019