குமிழ்


Online Shopping Cart and Payment Gateway : agridial shops - Shopping Cart Support by agridial.

Developed: AgriInfoMedia

குமிழ்

 கேள்வி - பதில்

 

1. குமிழ் மரம் இந்தியாவை தாயகமாகக் கொண்டதா?

குமிழ் மரத்தின் பூர்வீகம் இந்தியாவில் உள்ள அசாம் பகுதியாகும்.

 

2. தமிழ்நாட்டில் விவசாயிகள் பரவலாக குமிழ் மரத்தினை பயிரிடுகிறார்களா?

தமிழ்நாட்டில் பரவலாக மரம் வளர்த்து சாகுபடி நடைபெற்றுக் கொண்டுள்ளது. குமிழ்மரத்தின் வளர்ச்சி அதனுடைய வருமானம் குறைந்த காலத்தில் நிறைந்த வருமானமாக உள்ளதால் தற்போது விவசாயிகள் குமிழ் மரத்தினை விரும்பி வளர்க்கிறார்கள்.

 

3. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் குமிழ் மரத்தினை அதிகமாக பயிரிடுகின்றார்கள்?

புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் அதிகமாகவும், மற்ற அனைத்து மாவட்டங்களில் பரவலாகவும் பயிர் செய்கிறார்கள்

 

4. குமிழ்மரம் பர்னிச்சர் செய்ய பயன்படுமா?

குமிழ்மரத்தில் தீப்பெட்டி, தீக்குச்சி, பிளைவுட், பென்சில், கிரிக்கெட் மட்டை, ஜன்னல், கதவு நிலைகள், கைவினைப் பொருட்கள், மரச்சாமான்கள் மற்றும் பர்னிச்சர்கள் செய்யப் பயன்படுகிறது. உடல் ஊனமுற்றவர்களுக்கு செய்முறை கை, கால் தயாரிக்கவும் குமிழ்மரம் பயன்படுகிறது.

 

5. குமிழ்மரம் ஒரு மூலிகை மரமா?

குமிழ்மரம் முழுவதுமே மருத்துவ குணம் கொண்டது.

 

6. குமிழ்மரத்தில் முக்கியமாக எந்த வகையான மருந்து தயாரிக்கிறார்கள்?

குமிழ்மரத்தின் வேர்ப்பகுதியை எடுத்து நன்கு காய்ச்சி வடித்த ரசத்தை எடுத்து, காலை, மாலை குடித்து வந்தால், உடலில் உள்ள அனைத்து வியாதிக்கும் நல்ல மருந்து. இரத்தத்தை சுத்தப்படுகிறது.

 

7. கெட்ட இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் குமிழ் வேர்களுக்கு உண்டா..?

கெட்ட இரத்தத்தை நல்ல இரத்தமாக மற்றும் அற்புதத் தன்மை குமிழ் மரத்தின் வேர்களுக்கு உண்டு.

 

8. குமிழ்மரம் எத்தனை ஆண்டுகள் முதல் அறுவடை செய்யலாம்.?

குமிழ் மரத்தினை 6½  முதல்  7 ஆண்டுகளில், முதல் அறுவடையும், மறுதாம்பு வளர்ச்சியில் அடுத்தடுத்த 5 வருடங்களுக்கு ஒரு முறையும் 10 முறையும் மரத்தை வளர்த்து விற்பனை செய்யலாம்.

 

9. குமிழ்மரத்தினை நீங்களே ஒப்பந்த அடிப்படையில் எடுத்துக் கொள்கிறீர்களா?

குமிழ்மரத்தினை நடவு செய்த 6 முதல் ஒப்பந்தம் செய்து சாகுபடி செய்கிறோம்.

 

10. குமிழ் மரத்தின் ஒப்பந்த முறை, மாதிரி படிவம் உங்களிடம் உள்ளதா?

ஒப்பந்த மாதிரிப்படிவம் உள்ளது

 

11. குமிழ்மரம் எத்தனை அடி உயரம் வரை வளரும்?

மண்ணின் தன்மைக்கேற்ப குறைந்தபட்சம் 35 அடிமுதல் 50 அடிவரையிலும் அதிகபட்சம் 60 அடிக்கு மேலும் உயரம் வளரும் தன்மை கொண்டது.

 

12. குமிழ் மரம் வளர்க்கும் தோட்டத்தில் சந்தன மரம் ஊடுமரமாக வளரக்கலாமா?

குமிழ் மரம் வளர்க்கும் தோட்டதில் சந்தன மரம் ஊடுமரமாக வளர்க்கலாம்

 

13. குமிழ் மரத்தில் பக்க கிளைகள் வளருமா?

ஒருமுறை வளர்ந்த பக்ககிளைகள் வெட்டிவிட்டால் மறுமுறை வெட்டிய இடத்தில் பக்க கிளைகள் மீண்டும் வருவதில்லை.

 

14. எந்த மண்ணில் குமிழ்மரம் வளர்க்க ஏற்றதாகும்?

எல்லா மண் தன்மையிலும் எல்லா சீதோஷ்ன நிலையிலும் மிகவும் அற்புதமாக வளரும் தன்மை கொண்டதாகும்.

 

15. குமிழ் மரத்தின் ஆணிவேர் அதிகம் வளருமா? பக்க வேர் அதிகம் வளருமா?

மண்ணின் தன்மைக்கு ஏற்றார்போல் பக்க வேரும், ஆணி வேரும் வளரும்

 

16. குமிழ் மரத்தின் தாவரவியல் பெயர் என்ன?

பெருங்குமிழ் மரத்தின் தாவரவியல் பெயர் / Gmelina Arborea

 

17.குமிழ் மரத்திற்கு அரசு மானியம் உண்டா? எவ்வளவு?

நடவு செய்யும் மொத்த செலவில் 50% மானியம் கிடைக்கும்.

 

18. குமிழ் மரத்தில் நோய் தாக்கம் உண்டா?

நோய்கள் குமிழ்மரத்தினை அதிகம் தாக்குவதில்லை. பரவலாக சார் உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கம் உள்ளது.

 

19. குமிழ் மரத்தின் முக்கிய தேவைகள் என்ன?

டிம்பர் வேல்யூவுக்கு முக்கியமாக பயன்படுகிறது.

 

20. உடல் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை உறுப்புகள் செய்ய குமிழ்மரம் பயன்படுகிறதா?

கை, கால் ஊன்முற்றவர்களுக்கு செயற்கை, கை, கால் செய்ய பயன்படுகிறது.

 

21.குறைந்த மாதம் நீர் தேக்கம் உள்ள இடங்களில் குமிழ் மரம் வளருமா?

உறுதியாக வளரும், நீர்த்தேக்கம் உள்ள காலங்களில் நடவு செய்யலாம்

 

22. குமிழ் மரத்தில் மறுதாம்பு முறையில் வளர்க்க இயலுமா.?

வளர்த்தலாம்.

 

23.மறுதாம்பு  எத்தனை முறை வரும்?

 6 முதல் 8 முறை அறுவடை செய்யலாம்.

 

24. குமிழ், மரப்பலகை சித்திர வேலைப்பாடுகளுக்கு பயன்படுகிறதா

குமிழ், மரப்பலகை சித்திர வேலைப்பாடுகளுக்கு அதிகம் பயன்படுகிறது.

 

25. குமிழ் மரத்தினை ஒப்பந்த சாகுபடி செய்து கொள்வீர்களா?

நடவு செய்யும் போதே சாகுபடி ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

 

26. குமிழ் மரத்தின் ஒப்பந்த சாகுபடி முறை  எந்த அடிப்படையில் செய்கிறீர்கள்?

 விற்பனை செய்யும்போது உள்ள மார்கெட் விலைப்படி ஒப்பந்த சாகுபடி முறை செய்யப்படும்.

 

27. குமிழ்மர தோப்பில் ஊருபயிர் செய்யலாமா?

குமிழ்மரத்தில் மிளகு செடியை ஊடுபயிராக செய்யலாம். காப்பி, வாழை , காய்கறி வகைகள், கீரை வகைகள் போன்றவற்றை ஊடுபயிராகவும், சந்தன மரத்தை ஊடு பயிராகவும் பயிர் செய்யலாம்.

 

28.குமிழ்மரத்திற்கு அதிக பராமரிப்பு தேவையா?

மிக குறைந்த அளவு பராமரிப்பிலேயே சிறப்பான வளர்ச்சி அடையக்கூடிய மரம் குமிழ் மரம் ஆகும்.

 

29. ஒருமுறை கட்டிங் செய்த பிறகு மீண்டும் மீண்டும் வரும் மறுதாம்பு முறையில் வளரும் குமிழ் மரத்திற்கு பராமரிப்பு தேவையா?

மறுதுளிர்ப்பு முறையில் வளரும் குமிழ் மரமானது ஏற்கனவே பூமியில் வேர்கள் விட்டு முழுமையாக பரவி இருப்பதால் பராமரிப்பு என்பதே தேவை இல்லை. தண்ணீர் விடவும் தேவையில்லை.

 

30. மரத்தின் முதல் கட்டிங் 7-8 வருடம் என்றால் ,மறுதுளிர்ப்பு முறையில் மரம் வளர்த்தால் அறுவடை செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும்?

ஏற்கனவே 7 வருடங்களாக பூமியில் வேர்கள் விட்டு பரவி இருப்பதால் மாறுதாம்பு முறையில் அடுத்த 6 வருடத்தில் மரத்தை வெட்டி விற்பனை செய்து கொள்ளலாம்.

 

31. குமிழ்மரம் ஒரு ஏக்கரில் எவ்வளவு வருவாய் கிடைக்கும்?

ஒரு டன் குமிழ்மரம் ரூ. 6000 என்றாலும் ஏக்கருக்கு 650 மரங்களை வளர்க்கலாம். ஒரு மரம் 7  முதல் 8 ஆண்டுகளில் ஒரு மரம் சராசரியாக 1 டன் எடை அளவு கிடைத்தாலும் 6000 x 650 =39 இலட்சம் கிடைக்கும்.

 

32. தோப்பாக குமிழ்மரத்தின் இடைவெளி எவ்வளவு?

குமிழ்மரத்தின் இடைவெளி = 7x7 அடி ஆகும், குறைந்த வெப்பம். அதிக மழை பெய்யும் இடங்களில் 8x8 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

 

33. மானாவாரி நிலத்திலும்/ நீர்ப்பாய்ச்சல் நிலத்திலும் வளரும் குமிழ் மரத்தின் வித்தியாசம் என்ன?

வறட்சியான காலங்களில் தண்ணீர் பாய்ச்சி வளர்க்கும் குமிழ் மரத்தின் 6½ முதல் 7 ஆண்டுகளில் ஒரு மரம் 1¾ டன் முதல் 2¼ டன் கிடைக்கும்.

 

34. சொட்டு நீர் பாசன முறையிலும்/ வாய்க்கால் வழி பாசன முறையிலும் உள்ள வேறுபாடு என்ன?

·         வாய்க்கால் வழி பாசன முறையை விட சொட்டு நீர் பாசன முறையில் மரத்தின் வளர்ச்சி 15 முதல் 20 வரை கூடுதலாக இருக்கும்.

·         வாய்க்கால் வழி பாசனத்தில் ஆட்கள் தேவைப்படும்

·         சொட்டு நீர் பாசனமுறையில் ஆட்கள்  தேவையில்லை.

·         சொட்டு நீர்ப்பாசன முறையில் மிகக் குறைந்த தண்ணீர் போதுமானது.

·         சொட்டு நீர்ப்பாசனத்தில் தேவையான மரத்திற்கு மட்டும் தண்ணீர் பாய்வதால் களைகள் வளர வாய்ப்பு குறைவு

 

35. குமிழ் மரத்தில் பல்செட் தயாரிக்கப்படுகிறதா?

15 ஆண்டுகள் விளைந்த குமிழ் மரத்தில் இருந்து பல்செட் தயாரிக்கப்படுகிறது.

 

36. குமிழ் மரத்தில் பலவகையான ரகங்கள் உள்ளதா?

குமிழ் மரத்தில் ரகங்கள் ஏதும் இல்லை. ஆனால் விதை தேர்வு செய்யும் மரமானது 25 ஆண்டுகளுக்கு மேல் வயதுடைய தரமான மரங்களிலிருந்து விதைகளை தேர்வு செய்து, நாற்று உற்பத்தி செய்தால் தான். 7 - 8 ஆண்டுகளில் வருமானம் என்பது உறுதி செய்யப்படும். அதுபோல் உற்பத்தி செய்யும் நாற்று தான் 50 முதல்  60 ஆண்டு காலம் உயிர்வாழும் தன்மை கொண்ட மரமாக இருக்கும்.மறு தாம்பு மூலம் பயன் பெற ஏற்றதாக இருக்கும்.

 

37. டிம்பர் தேவைக்கு பயன்படும் மரங்கள் விலை உயர வாய்ப்பு உள்ளதா?

டிம்பர் தேவைக்கு பயன்படும் குமிழ் மற்றும் மரங்கள் அனைத்தின் மதிப்பும் இரண்டு ஆண்டுகளில் இருமடங்கு விலையேற்றம் அடையும். ஏனென்றால் தற்போதைய இந்தியாவின்  மரத்தேவையை பூர்த்தி செய்வது மலேசியா மற்றும் அந்தமான் மரங்கள் தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கும் மரத்தேவை குறைந்து வருவதால் ஏற்றுமதி தடை ஏற்படும் சூழ்நிலை உருவாகி விட்டது. அதனால் இந்தியாவில் மரப்பற்றாக்குறை மேலும் ஏற்படும் நிலையில் விலை இருமடங்காக மாறுவது நிச்சயம்.

 

38. மரம் உயரம் செல்ல செல்ல வளைத்து கவாத்து செய்யலாமா?

எக்காரணத்தை கொண்டும் மரங்களை கவாத்து செய்யக் கூடாது.

 

39. எவ்வளவு ஆழம் குழி எடுத்து நடவு செய்ய வேண்டும்?

பூமியின் மண் தன்மையானது ஆழமாக உள்ள நிலத்தில் 1.5*1.5*1.5 அடி நீளம், அகலம், ஆழ குழி எடுத்தும் மண் தன்மை குறைவாக உள்ள இடங்களில் 2*2*2 அடி நீளம், அகலம், குழி எடுத்து நடவு செய்யலாம்.

 

40. குமிழ் மரத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?

குமிழ் மரத்தின் ஆயுள் காலம் 50/60 ஆண்டுகள் ஆகும்.

ஊட்டம் அளிப்பது வேளாண்மைத் தகவல் ஊடகம்
RichFarmer Trees Plantation Private Limited © 2019